வானில் இன்று தோன்றுகிறது இளஞ்சிவப்பு முழு நிலா

By செய்திப்பிரிவு

இளஞ்சிவப்பு முழு நிலவு (சூப்பர் பிங்க் மூன்) வானில் இன்று தோன்கிறது. 2020-ம் ஆண்டில் இதுவே மிகப்பெரிய, பிரகாசமான முழு நிலவாக இருக்கும்.

நிலவு, முழு நிலவை (பவுர்ணமி) அடையும்போதும், பூமிக்கு மிக அருகில் (perigee) வரும்போதும் வானில் ‘சூப்பர் மூன்’ தோன்றுகிறது.

இந்நிலையில் இந்த வசந்த காலத்தில் முதல் முழு நிலவாக சூப்பர் பிங்க் நிலா தோன்றும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது இளஞ்சிவப்பு நிலா என அழைக்கப்பட்டாலும், அது அந்த நிறத்தில் இருக்காது. வட அமெரிக்காவில் ஓர் இளம் சிவப்பு மலர் கொத்துக் கொத்தாக பூப்பதால், இந்த சூப்பர் மூனுக்கு ‘சூப்பர் பிங்க் மூன்’ என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

இந்தியாவில் காலை 8.05 மணிக்கு இதன் பிரகாசம் உச்ச அளவை எட்டுகிறது. நள்ளிரவில் ரசிக்கலாம். அப்போது நிலவு, பூமிக்கு நெருக்கமாக 3,56,907 கி.மீ. தொலைவுக்கு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

மேலும்