கரோனா வைரஸ் தொற்றை தடுத்து நிறுத்த அதிகமான அளவு நிதி தேவைப்படுவதால் இரண்டு ஆண்களுக்கு எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரை மையமாகக் கொண்டு பரவத் தொடங்கிய கரோனா வைரஸால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
» காணொலிக் காட்சி வழியாக மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
» நியூயார்க்கில் புலிக்கு கரோனா தொற்று எதிரொலி: இந்தியாவிலும் உயிரியல் பூங்காவில் கண்காணிப்பு
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை தொடர்பாக மாநில முதல்வர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவ துறையினர் என பல தரப்பினருடன் பிரதமர் மோடி காணொலிக் காட்சி வசதி மூலம் உரையாடி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் காணொலிக் காட்சி மூலம் இன்று நடந்தது. அவருடன் மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷ உள்ளிட்டோரும் பங்கேற்றனர். வேறு சில அமைச்சர்கள் ஆங்காங்கே காணொலியில் இணைந்தனர்.
கரோனா தொற்று பரவாமல் தடுப்பது இதற்காக அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் மாநில அரசுகளுடன் இணைந்து கரோனா ஒழிப்பு பணியை மேற்கொள்வது பற்றியும் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசித்தார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் அறிவித்தார். அவர் கூறியதாவது:
கரோனா வைரஸ் தொற்றை தடுத்து நிறுத்த அதிகமான அளவு நிதி தேவைப்படுவதால் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. இதனால் 2020- 21, 2021 -22 இரண்டு ஆண்களுக்கு எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கான இந்த நிதி 7900 கோடி ரூபாயாகும். இதனை சுகாதார பணிகள், கரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சி பணிகளுக்காக பயன்படுத்திக் கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
27 mins ago
இந்தியா
56 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago