கரோனாவால் பங்குச்சந்தை வீழ்ச்சி: முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 2 மாதங்களில் 28 சதவீதம் குறைந்தது

By பிடிஐ

கரோனா வைரஸ் மனிதர்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. மனிதர்களின் சம்பாத்தியத்துக்கும், பொருளாதாரத்துக்கும் பெருத்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கரோனாவின் தாக்கத்தால் கடந்த 2 மாதங்களில் 28 சதவீதம் குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது பங்குச்சந்தையில் கடந்த 2 மாதங்களில் ஏற்பட்ட சரிவால் நாள் ஒன்றுக்கு 300 மில்லியன் டாலர் சரிந்து 48,000 கோடி டாலர்களாக (ரூ.36.54 லட்சம் கோடி) குறைந்துள்ளதாக ஹருன் குளோபல் ரிச் லிஸ்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏறக்குறைய கடந்த 2 மாதங்களில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 19,000 கோடி டாலர் குறைந்ததால், உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 9-வது இடத்திலிருந்து 17-வது இடத்துக்குச் சரிந்துள்ளார்.

ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார்.

மற்ற இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பும் கரோனா வைரஸின் பாதிப்பால் குறைந்துள்ளது. குறிப்பாக கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 37 சதவீதம் அல்லது 600 கோடி டாலர்கள் குறைந்துள்ளது. ஹெச்சிஎல் தொழில்நுட்ப நிறுவனத்தி்ன் தலைவர் ஷிவ் நாடாரின் சொத்து மதிப்பு 26 சதவீதம் அல்லது 500 கோடி டாலர்கள் குறைந்தது. உதய் கோட்டக்கின் சொத்து மதிப்பு 28 சதவீதம் அல்லது 400 கோடி டாலர்கள் சரிந்துள்ளது.

சொத்து மதிப்புக் குறைவால் இந்த 3 கோடீஸ்வரர்களும் உலகின் முதல் 100 கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டுள்ளனர். முகேஷ் அம்பானி மட்டும் முதல் 100 இடங்களில் நீடிக்கும் ஒரே இந்திய கோடீஸ்வரர் ஆவார்.

கரோனா வைரஸ் தாக்கத்தால் பங்குச்சந்தையில் ஏற்பட்ட இழப்புகளில் உலக அளவில் 2-வது அதிகம் பாதிக்கப்பட்ட தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஆவார். முதலாவது இடத்தில் பிரான்ஸின் எல்விஎம்ஹெச் பேஷன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பெர்நார்ட் அர்நால்ட் ஏறக்குறைய 30,000 கோடி டாலர்களை இழந்துள்ளார்.

அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பிஜோஸ்.

அமெரிக்கத் தொழிலதிபர் வாரன் பப்பட்டின் சொத்து மதிப்பு கடந்த 2 மாதங்களில் 1,900 கோடி டாலர் குைறந்து 8,300 கோடி டாலாரகச் சரிந்துள்ளது.

இதுதவிர கார்லோஸ் ஸ்லிம் பேமலி, பில் கேட்ஸ், மார்க் ஜூகர்பெர்க், லாரி பேஜ், செர்ஜி ப்ரின், மிகேல் ப்ளூம்பெர்க் ஆகிய தொழிலதிபர்களின் சொத்து மதிப்பும் குறைந்துள்ளது.

அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பிஜோஸ் தொடர்ந்து உலகின் முதல் கோடீஸ்வரராக இருந்து வருகிறார். அவரின் சொத்து மதிப்பு 13,100 கோடி டாலர்களாக இருந்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் ஜெப் பிஜோஸுக்கு 9 சதவீதம் மட்டுமே தனது சொத்தின் மதிப்பில் இழப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

34 mins ago

இந்தியா

17 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்