நாடு முழுவதும் லாக்டவுன் ஏற்பட்டுள்ள நிலையில், நோயுற்ற தந்தையைக் காண ஒரே வழி சைக்கிள்தான் என பயணத்தில் ஈடுபட்டவரை வழியிலேயே உதவிக்கரம் நீட்டியது துணை ராணுவம். அதுமட்டுமின்றி அவரது நோய்வாய்ப்பட்ட தந்தை துணை ராணுவ ஹெலிகாப்டரிலேயே கொண்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளது.
துணை ராணுவத்தின் மனிதநேயமிக்க இச்செயலுக்கு நெட்டிசன்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ஏப்ரல் 1 அன்று, 21 நாள் லாக்டவுன் தொடங்கிய ஒரு வாரத்திற்குப் பிறகு, மும்பையில் செக்யூரிட்டியாக பணியாற்றிவரும் ஆரிஃப் (30) க்கு தனது தந்தை “பாரிய பக்கவாத நோயால் அவதிப்பட்டுவருவது குறித்து தகவல் கிடைத்துள்ளது.
அவரது 60 வயது அவருடைய தந்தை வசிப்பது காஷ்மீரில் எல்லைப் பகுதியில் உள்ள ஒரு தொலை தூர கிராமம். இது மும்பையில் இருந்து ஜம்முவின் ராஜோரி மாவட்டத்தில் உள்ளது.
» படேல் சிலையை 30 ஆயிரம் கோடி என விளம்பரம் செய்த விஷமி: உறுதிபடுத்தாமல் வெளியிட்ட ஓஎல்எக்ஸ் நிறுவனம்
» ‘‘உலகிலேயே பெரிய கட்சி பாஜக; பிரதமர் மோடியை உலகமே உற்றுப் பார்க்கிறது’’ - ஜே.பி. நட்டா பெருமிதம்
கரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் லாக்டவுன் ஏற்பட்டுள்ள நிலையில், தந்தையைக் காணச் செல்வது அவ்வளவு எளிதானதல்ல என்று அவருக்கு தோன்றியது.
இதனால் ஆரிஃப் தனது நோயுற்ற தந்தையைக் காண ஒரே வழி எவ்வளவு தூரமானாலும் அது சைக்கிள்தான் என முடிவு செய்தார். உண்மையில் மும்பையிலிருந்து ஜம்முவுக்கு செல்ல 2,100 கி.மீ.சைக்கிள் பயணம் அது.
இந்தியா-பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள தனது கிராமத்திற்கு முறையான போக்குவரத்து முறை எதுவும் இல்லை என்பது நினைவுக்கு வரவே அவர் தனது சைக்கிளில் அதிக தூரத்தை கடக்க முடிவு செய்தார்.
ஆரிஃப், ஏதோ அதிசயம் நிகழும் என்ற நம்பிக்கையில் வெகு நீண்ட தொலைவிலான சைக்கிள் பயணத்தை மேற்கொண்டார், அப்படியொரு உந்துதல் தான் அவரை ஆபத்தான நிலையில் இருந்த தனது தந்தையை பார்க்க முடியும் என்ற நம்பிக்கையைத் தந்திருந்தது.
அதிசயம் நடந்தது, அவரைப் பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிட்டதை மத்திய ரிசர்வ் போலீஸ் படை பார்த்துள்ளது. ஆரிஃப்புக்கு உடனே உதவிக் கரம் நீட்டியது, துணை ராணுவப் படை அவருக்கும் அவரது தந்தையுக்கும் கை கொடுத்தது.
காஷ்மீரை தளமாகக் கொண்ட சிஆர்பிஎஃப்-இன் ‘மடகார்’ ஹெல்ப்லைன் செயல்பாட்டுக்கு வந்தபின், அதன்மூலம் தகவல் பரிமாற்றங்கள் செய்யப்பட்டு ஆரிஃப்பின் தந்தை வஜீர் உசேன் ஞாயிற்றுக்கிழமை பஞ்ச்கிரெய்ன் கிராமத்திலிருந்து சிறப்பு ராணுவ விமானத்தில் அனுப்பப்பட்டார்.
இதுகுறித்து சிஆர்பிஎஃப் சிறப்பு இயக்குநர் ஜெனரல் (ஜே.கே. மண்டலம்) சுல்பிகர் ஹசன் கூறியதாவது:
“ஆரிஃப்பின் பயணம் குறித்து ஒரு ஊடகத்தால் காஷ்மீரில் உள்ள மடகார் ஹெல்ப்லைனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மடாகார் ஹெல்ப் லைன் என்பது சிஆர்பிஎஃப் ஏற்படுத்தியுள்ள தொலைபேசி ஹெல்ப்லைன் மையம் ஆகும். ஹெல்ப்லைன் உடனடியாக செயல்பட்டது, ஆரிஃப்பை அழைத்து, ஐந்து மாநிலங்களில் பரவியுள்ள சிஆர்பிஎஃப் பட்டாலியன்கள் மூலம் அவர் பயணத்தை எளிதாக்குவதற்கான தளவாடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. அதற்குள் ஆரிஃப் மும்பையிலிருந்து தனது சைக்கிளில் குஜராத் வந்துவிட்டார்.
குஜராத்தின் வதோதராவில் ஞாயிற்றுக்கிழமை அவருக்கு மதிய உணவு, ரூ .2,000 ரொக்கம், சானிடிசர், முகக்கவசங்கள் மற்றும் சில உலர்ந்த பழங்கள் வழங்கப்பட்டன. ''கவலை வேண்டாம், தங்கள் தந்தையை நாங்கள் கவனித்துக்கொள்வோம்'' என்று உறுதிமொழி அளித்தோம். லாக்டவுன் கட்டுப்பாடுகள் காரணமாக எங்கள் தளத்திலே இரவு தங்கி இருக்குமாறு நாங்கள் அவரிடம் கேட்டோம்.
எவ்வாறாயினும், தனது தந்தையை எப்படியாவது சந்திக்க விரும்புவதாக ஆரிஃப் வலியுறுத்தினார். எனவே, குஜராத் காவல்துறையின் உதவியுடன் அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் சென்ற ஒரு டிரக்கில் பயணிக்க அவருக்கு ஏற்பாடு செய்தோம்.
திங்கள்கிழமை நண்பகலுக்குள் டிரக் அவரை ராஜஸ்தானின் ஜோத்பூர் அருகே இறக்கிவிடும், அதற்குப் பிறான அவரது பயணத்தை நாங்கள் ஏற்பாடு செய்வோம்.
இதற்கிடையில், ராஜோரிக்கு ஒரு சிறப்பு ராணுவ ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டது, அங்கு இருந்து அவரது தந்தையை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் ஜம்முவுக்கு கொண்டுசென்றது. ஜம்முவில் உள்ள ஒரு அரசு மருத்துவக் கல்லூரியில் ஆரிப்பின் தந்தை அனுமதிக்கப்பட்டார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற ஆரிஃப்களுக்கு உதவ மடகார்ஹெல்ப்லைன் எதை வேண்டுமானாலும் செய்யும்.
இவ்வாறு சிஆர்பிஎஃப் சிறப்பு இயக்குநர் ஜெனரல் (ஜே.கே. மண்டலம்) சுல்பிகர் ஹசன் தெரிவித்தார்.
மற்றொரு அதிகாரி கூறுகையில் 'மடகார்ஹெப்லைன், ஆரம்பத்தில் ஆரிப்பின் தந்தையை அவரது கிராமத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ள ராஜோரி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் அவருக்கு சிறந்த மருத்துவ உதவி தேவைப்பட்டதால், மீண்டும் துருப்புகளின் உதவியுடன் அவரை விரைவாக ஜம்முவிற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது'' என்றார்.
இந்திய துணை ராணுவப்படையான சிஆர்பிஎஃபின் மடகார் ஹெல்ப்லைனுக்கு ட்விட்டரில் கணக்கு உள்ளது. அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் "@CRPFmadadgaar ஐ எந்தவொரு உதவிக்கும் 24X7 எந்த நேரத்திலும் 14411 எண்ணில்அழைக்கலாம் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago