பிரதமரின் 9 மணி 9 நிமிட விளக்கு அணைப்பு வேண்டுகோளுக்கு மக்களிடையே கிடைத்துள்ள வரவேற்பை அடுத்து அகல்விளக்குகள் விற்பனை ஆன்லைனில் சூடுபிடித்ததாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
உலகத்தில் பெரும் பேரழிவுகளை ஏற்படுத்தி இந்தியாவிலும் ஊடுருவி 77 பேரை இதுவரை கரோனா வைரஸ் பலிகொண்டுள்ளது.
இதன் காரணமாக கரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக ஒற்றுமையின் அடையாளமாக ஞாயிறு மாலை 9 மணிக்கு மின் ஒளி விளக்குகளை அணைக்குமாறு பிரதமர் குடிமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
.இதுகுறித்து டெல்லியைச் சேர்ந்த சில விற்பனையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ராம் ரவி க்குமார் என்ற விற்பனையாளர் இதுகுறித்து ஏஎன்ஐயிடம் கூறுகையில், அகல்விளக்குகள் அனுப்பிவைக்குமாறு நிறைய ஆர்டர்கள் எங்களுக்கு வந்துள்ளன. நேரிலும் மக்கள் வாங்கிச் சென்றனர். இதன்மூலம் எங்கள் விற்பனை 50 சதவீதம் உயர்ந்துள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.இதற்கு காரணம் மோடிஜியின் வேண்டுகோள்தான்'' என்றார்.
மற்றொரு கடைக்காரர் கூறுகையில், ''லாக்டவுன் காரணமாக வாடிகக்கையாளர்கள் யாரும் நேரில் வரவில்லை. ஆனால் தொலைபேசியில் சில ஆர்டர்கள் கிடைத்துள்ளன. இதன்பிறகு ஒருவேளை வாடிக்கையாளர்கள் வரக்கூடும். ஆனால் நாளையிலிருந்து மக்கள் வருவார்கள் என்று நம்புகிறேன்'' என்றார்.
கொல்கத்தாவில் அகல்விளக்குகளுக்கு பதிலாக மெழுகுவர்த்திகளை மக்கள் வாக்கிச் செல்வதாக தகவல்கள் கூறுகின்றன. அங்கு இதுநாள் வரை 10 ரூபாய்க்கு விற்ற மெழுகுவர்த்தி பிரதமர் மோடியின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக மக்களிடையே ஏற்பட்ட ஆர்வம் காரணமாக இன்று ஒரு மெழுகுவர்த்தியின் விலை ரூ.30 அளவுக்கு விற்பனையாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
58 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago