காஷ்மீரில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரிப்பதை முடிவுக்குக்கொண்டுவர கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
உலகமெங்கும் பெரும் பாதிப்பையும் பேரழிவையும் ஏற்படுத்திவரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் ஊடுருவி பரவத் தொடங்கியுள்ளது. இந்நோய்க்கு இதுவரை இந்தியாவில் 3374 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் 77 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு தழுவிய லாக்டவுன் தொடங்குவதற்கு முன்பே ஜம்மு காஷ்மீரில் கடும் கட்டுப்பாடுகள் தொடங்கிவிட்டன.
பிரதமர் அறிவித்த நாடு தழுவிய ஊரடங்கு ஒரு வாரத்திற்கு முன்பே காஷ்மீர் முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன, உடற்பயிற்சிக் கூடங்கள், பூங்காக்கள், கிளப்புகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களும் மூடப்பட்டன.
ஸ்ரீநகரின் கன்யார் பகுதியைச் சேர்ந்த 67 வயதான ஒரு பெண், மார்ச் 16 ஆம் தேதி சவூதி அரேபியாவிலிருந்து உம்ராவை (ஹஜ் பயணம்) முடித்துக்கொண்ட பின்னர் திரும்பி வந்தபிறகு அவருக்கு பரிசோதனை நடைபெற்றது. அதில் அவருக்கு, கோவிட் -19 நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டதோடு அவரோடு காஷ்மீரில் தொடர்புகொண்ட 2000 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதனை அடுத்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தடையை மீறி திறந்த பேக்கரி ரொட்டிக் கடைக்கு சீல் வைக்கப்படுகிறது.,
வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மார்ச் 19 அன்று பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் முதலில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
மார்ச் 24 ம் தேதி மாலை நாடு முழுவதும் லாக்டவுனை பிரதமர் அறிவித்தாலும், கரோனா வைரஸின் பரவலைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இங்குள்ள யூனியன் பிரதேச நிர்வாகம் மார்ச் 22 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் முழுவதும் மார்ச் 31 வரை லாக்டவுன் அறிவித்தது,
ஜம்மு-காஷ்மீரில் சனிக்கிழமை மட்டும் மொத்தம் 17 பேருக்கு புதியயதாக கோவிட் -19 இருப்பது பரிசோதனையின்மூலம் கண்டறியப்பட்டன, இதில் ஜம்மு பிராந்தியத்தில் பாதிக்கப்பட்டவர்களும் அடங்கும். இதன்மூலம் ஜம்மு-காஷ்மீரில் கரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது. காஷ்மீரில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் மீண்டுள்ளனர்.
காஷ்மீரில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதுகுறித்து காஷ்மீர் யூனியன் பிரதேச உயரதிகாரிகள் கூறியதாவது:
இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் 14 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து நாளுக்கு நாள் வைரஸ் தொற்று நோயாளிகள் எண்ணிக்கை பெருகுவதை கணக்கில் கொண்டு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
நோய்த்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த யூனியன் பிரதேசம் முழுவதும் அதிகாரிகள் ஒரு நோய் ஆக்கிரமிப்பு தொடர்பு தடமறிதல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.
இன்று முதல் சாலைகளில் மக்கள் நடமாட்டத்திற்கும் மக்கள் கூடுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட தடையை அமல்படுத்துவதில் கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்படும். அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கும் நேர வரையறை வைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படையினர் ஜம்மு காஷ்மீரின் பிரதான சாலைகளை மூடியுள்ளனர், மக்களின் தேவையற்ற நடமாட்டத்தை சரிபார்க்கவும், லாக்டவுனை செயல்படுத்தவும் பல இடங்களில் தடைகளை அமைத்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளத்தாக்கு முழுவதும் சந்தைகள் மூடப்பட்டன, பொது போக்குவரத்து சாலைகளில் இருந்து மருந்தகங்கள் மற்றும் மளிகை பொருட்கள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டன.
சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இவ்வாறு காஷ்மீர் யூனியன் பிரதேச உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
45 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago