கரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரே நாளளில் 350-க்கும் மேற்பட்டோர் அதிகரித்து 3 ஆயிரத்து 374 ஆக உயர்ந்துள்ளது, உயிர்பலியைப் பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்து, 77 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
கரோனா வைரஸுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 30 ஆக இருக்கிறது, 266 பேர் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்து சென்றுள்ளனர்.
இன்று காலை 9 மணி நிலவரப்படி சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பின்படி தமிழகத்திலும், கர்நாடகாவிலும் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் கூறப்பட்டு இருப்பதாவது:
மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை கரோனா வைரஸுக்கு அதிகமான உயிரிழப்பு நேர்ந்துள்ளது. அங்கு 24 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்கள். அடுத்த இடத்தில் குஜராதத்தில் 10 பேரும், தெங்கானாவில் 7 ேபரும், மத்தியப்பிரதேசம், டெல்லியில் தலா 6 பேரும், பஞ்சாப், தமிழகம், கர்நாடகாவில் தலா 5 பேரும் உயிரிழந்துள்ளார்கள்
மேற்கு வங்கத்தில் 3 பேரும், ஜம்மு காஷ்மீர், உத்தரப்பிரதேசம், கேரளாவில் தலா 2 பேரும் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். ஆந்திரா, பிஹார், இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்
மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 490 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதைத்தொடர்ந்து தமிழகத்தில் 485 பேரும், டெல்லியில் 445 பேரும், கேரளவில் 306 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தெலங்கானாவில் 269 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 227 பேரும், ராஜஸ்தானில் 200 பேரும், ஆந்திராவில் 161 பேரும், கர்நாடகாவில் 144 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 105 பேரும், மத்தியப்பிரதேசத்தில் 104 பேரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்
ஜம்மு காஷ்மீரில் 92 பேரும், மேற்கு வங்கத்தில் 69 பேரும், பஞ்சாபில் 57 பேரும், ஹரியாணாவில் 49 பேரும், பிஹாரில் 19, அசாமில் 24, உத்தரகாண்ட்டில் 22, ஒடிசாவில் 20,சத்தீஸ்கரில் 18, லடாக்கில் 14 பேரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அந்தமான் நிகோபர் தீவில் 10 பேர், சத்தீஸ்கரில் 9 பேர், கோவாவில் 7 பேர், இமாச்சலப்பிரதேசத்தில் 6 பேர், புதுச்சேரியில் 5 பேரும், ஜார்க்கண்ட், மணிப்பூரில் தலா 2 பேரும், மிசோரம், அருணாச்சலப்பிரதேசத்தில் தலா ஒருவரும் கரோனாவால் பாதி்க்கப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
முக்கிய செய்திகள்
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago