கடுமையாக வீழ்ந்த காய்கறி விலை; வாங்க ஆளில்லை: சாலையில் கொட்டும் வணிகர்கள்

By செய்திப்பிரிவு

கரோனா ஊடரங்கு காரணமாக மக்கள் முடங்கியுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றான காய்கறி விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அச்சம் காரணமாக கடைகளுக்கு மருந்து உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக வந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகின்றனர். கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டு ஸ்தலங்களும் மூடப்பட்டுள்ளன.

தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் முக்கிய நகரங்களில் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதிலும் சிக்கல் நீடித்து வருகிறது.

அதுமட்டுமின்றி மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருப்பதால் உணவு விடுதிகள், ஓட்டல்கள் மூடப்பட்டு உணவுக்காக காய்கறிகள் அதிகஅளவில் பயன்படுத்துவதும் குறைந்துள்ளது. விவசாயிகளின் தோட்டத்தில் இருந்து காய்கறிகள் கொண்டு செல்வதில் சிக்கல் நீடிக்கிறது.

அப்படியே கொண்டு சென்றாலும் வாங்குவது குறைந்துள்ளதால் விற்பனை ஆகாமல் உள்ளது. இதனால் நாட்டின் பல பகுதிகளிலும் காய்கறிகள் விலை வெகுவாக குறைந்துள்ளது. சந்தைகளில் வாங்க ஆளில்லாமல் வர்த்தர்கள் காய்கறிகளை சாலைகளில் கொட்டி வருகின்றனர்.

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள சந்தையில் தக்காளி, கேரட் உள்ளிட்ட பல காய்கறிகளும் அழுகி வருவதால் வேறு வழியின்றி வர்த்தகர்கள் சாலைகளில் கொட்டி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்