இந்தியாவில் கரோனா பாதிப்பு 2,301 ஆக அதிகரிப்பு; 157 பேர் குணமடைந்தனர்: உயிரிழப்பு 56 ஆக அதிகரிப்பு: 2-வது இடத்தில் தமிழகம்

By பிடிஐ

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இந்தியாவில் 2,301 ஆக அதிகரித்துள்ளது. 157 பேர் குணமடைந்தனர். அதேசமயம் கரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த 2,301 கரோனா வைரஸ் நோயாளிகளில் 55 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

''இன்று காலை 9 மணி நிலவரப்படி கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,301 ஆக அதிரித்துள்ளது. 157 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். 56 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். அதைத் தொடர்ந்து குஜராத்தில் 7 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 6 பேரும், டெல்லி, பஞ்சாபில் தலா 4 பேரும், கர்நாடகம், தெலங்கானாவில் தலா 3 பேரும் உயிரிழந்துள்ளனர். ஜம் முகாஷ்மீர், உத்தரப் பிரதேசம், கேரளாவில் தலா 2 பேர் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். ஆந்திரா, தமிழகம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 335 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 309 பேரும், கேரளாவில் 286 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் 219 பேரும், ராஜஸ்தானில் 133 பேரும், ஆந்திராவில் 132 பேரும், கர்நாடகாவில் 124 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரை 113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானாவில் 107 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 99 பேரும், குஜராத்தில் 87 பேரும், ஜம்மு காஷ்மீரில் 70 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் 53 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தில் 46 பேரும், அந்தமான் நிகோபர் தீவு, உத்தரகாண்ட் ஆகியவற்றில் தலா 10 பேரும் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். சத்தீஸ்கரில் 9 பேர், கோவா, இமாச்சலப் பிரதேசம் மாநிலங்களில் தலா 6 பேர், ஒடிசாவில் 5 பேர், புதுச்சேரியில் தலா 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜார்க்கண்ட், மணிப்பூரில் தலா 2 பேரும், மிசோரம், அருணாச்சலப் பிரதேசத்தில் தலா ஒருவரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்