ஆட்டோ, இ-ரிக்ஷா, வாடகை கார், கிராமின் சேவா ஓட்டுநர்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவை செய்து வரும் ஓட்டுநர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அச்சம் காரணமாக கடைகளுக்கு மருந்து உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக வந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகின்றனர். கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டு ஸ்தலங்களும் மூடப்பட்டுள்ளன.
தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் முக்கிய நகரங்களில் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.
» கரோனா ஊரடங்கு; கர்நாடகாவில் மதுபானக் கடை உடைப்பு: ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள மதுபானம் கொள்ளை
இந்தநிலையில் பொது போக்குவரத்து சேவை செய்து வரும் ஓட்டுநர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
ஆட்டோ, இ-ரிக்ஷா, வாடகை கார், கிராமின் சேவா ஓட்டுநர்கள் உள்ளிட்ட ஓட்டுநர்கள் இதன் மூலம் பயன்படுவர் என அறிவித்துள்ளனர். அடுத்த ஒரு வாரத்தில் இருந்து 10 நாட்களுக்குள் இந்த பணம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
25 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago