காக்கிச் சட்டையின் கருணை: லாக்-டவுன் காலகட்டத்தில் பிரசவ வலியால் துடித்த 40 பெண்கள்; மருத்துவமனையில் சேர்த்த டெல்லி காவல்துறை

By ஏஎன்ஐ

லாக்-டவுன் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், பிரசவ வலியில் துடித்த 40 பெண்களை இதுவரை டெல்லி போலீஸார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உதவி புரிந்துள்ளனர்.

உலகமெங்கும் 47 ஆயிரம் பேரை பலிவாங்கியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவிலும் ஊடுருவியுள்ள நிலையில் 21 நாள் லாக்-டவுனை பிரதமர் மோடி அறிவித்தார். கடந்த வாரம் மார்ச் 24 -ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த தேசிய ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர அனுமதி வழங்கப்படுவதில்லை.

லாக்-டவுன் காரணமாக போலீஸார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் மோசமாக நடந்துகொண்டதாகப் புகார்கள் எழுந்தன. எனினும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்காக அவர்கள் கடுமையாக சில இடங்களில் நடந்துகொண்டாலும் உண்மையாக உதவி தேவைப்படும் இடங்களில் எல்லாம் போலீஸாரின் தன்னமலமற்ற உதவி மனப்பான்மையையும் நம்மால் காண முடிகிறது.

லாக்-டவுன் அறிவிக்கப்பட்ட பிறகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்ட நிலையில் டெல்லியில் கடந்த வாரம் முதல் இன்றுவரை 40 கர்ப்பிணிப் பெண்கள் பிரசவ வலியால் துடித்தபோது, போலீஸார் அவர்களை மருத்துவமனையில் உரிய நேரத்தில் சேர்த்துள்ளனர்.

இதுகுறித்து டெல்லி காவல்துறையின் செய்தித் தொடர்பு அதிகாரி எம்.எஸ்.ரந்தாவா கூறியதாவது:

''ஏப்ரல் 1 ஆம் தேதி வரை, பிரசவ வலிக்கு உள்ளான 40 பெண்களை டெல்லி போலீஸார் பாதுகாப்பாக மருத்துவமனையில் அனுமதிக்க உதவினர். அவர்களில் 20 பேர் சப்தூர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு ஏழு பேர் சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். காவலர்கள் தாங்கள் ரோந்து வரும் பி.சி.ஆர் வாகனங்கள் மூலமாகவே இந்த உதவிகளைச் செய்தனர்.

மேலும், தேசிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், டெல்லி காவல்துறை 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு வழங்கியுள்ளது.

யாருக்காவது ஏதேனும் அவசர நிலை அல்லது ஏதேனும் சிக்கல் இருந்தால் அவர்கள் தாராளமாக காவல் துறையை அணுகலாம். அவர்கள் எங்கள் ஹெல்ப்லைன் எண்கள் 112 அல்லது 23469526 என்ற எண்களில் அழைக்கலாம்''.

இவ்வாறு டெல்லி காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

32 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்