கரோனோ வைரஸுக்கு எதிரான போராட்டங்களில் நாட்டிற்கு உதவுவதற்கும் கரோனா நோயாளிகளைக் காப்பாற்றவும் குறைந்த விலையில் வென்டிலேட்டர்களைத் தயாரிக்க புனேவைச் சேர்ந்த இளம் பொறியாளர்கள் முன்வந்துள்ளனர்.
கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக 1,965 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இந்நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணக்கை 41 லிருந்து 50 ஆக அதிகரித்தள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா நோயாளிகள் உயிரிழக்காமல் தடுக்க வென்டிலேட்டர்களின் பங்கு மிக முக்கியமானது. வென்டிலேட்டர்கள் பற்றாக்குறையினாலேயே பலி எண்ணிக்கை அதிகரிப்பதைத் தடுக்க முடியாமல் பல நாடுகள் திண்டாடி வருகின்றன.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஆய்வாளர்கள் குழுவின் மதிப்பீடுகளின்படி நோய் இயக்கவியல், பொருளாதாரம் மற்றும் கொள்கை மையம் மற்றும் பிரிகென்டன் பல்கலைக்கழகம், இந்தியாவில் தற்போது 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் இருப்பில் உள்ளன. ஆனால் ஜூலை 2020 க்குள் நாட்டிற்கு 10 லட்சம் வென்டிலேட்டர்கள் தேவைப்படலாம்.
தற்போது சர்வதேச சந்தையில் ஒரு வென்டிலேட்டரின் விலை 5 ஆயிரம் டாலரிலிருநது 50 ஆயிரம் டாலர் வரை பல்வேறு தரத்தில் உள்ளன. ஆனால், மிகக் குறைந்த விலையில் ரூ.50 ஆயிரத்துக்குள்ளாகவே ஒரு வென்டிலேட்டரைத் தயாரிக்க முடியும் என்கிறார்கள் இந்த இளம் பொறியாளர்கள்.
சூரிய மின்சார பேனல் ஆலைகளை தண்ணீர் இல்லாமலேயே சுத்தம் செய்யும் இயந்திரங்களை மிகக் குறைந்த விலையில் தயாரித்துவந்த 'நோக்கா ரோபாட்டிக்ஸ்' நிறுவனத்தை தொடங்கிய இந்த இளம் பொறியாளர்கள் தற்போது அப்பணிகளை ஓரங்கட்டிவிட்டு நாட்டின் அதிமுக்கியப் பிரச்சினைக்காக களம் இறங்கியுள்ளனர்.
உயிருக்குப் போராடும் மனிதர்களுக்குத் தேவையான செயற்கை சுவாசக் கருவியான வென்டிலேட்டரைத் தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டியுள்ளனர்.
இந்நிறுவனப் பொறியாளர்கள் அனைவரும் கான்பூர் ஐஐடியில் சில ஆண்டுகளுக்குமுன் படிப்பை முடித்தவர்கள். ஐ.ஐ.டி கான்பூர் பட்டதாரிகளால் 2017 ஆம் ஆண்டில் இணைந்து நிறுவப்பட்ட இரண்டு வயதான ஸ்டார்ட் அப் நோக்கா எந்தத் தயாரிப்பையும் மக்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ப மிகக் குறைந்த விலையில் ஆனால் உயர் தரத்துடன் தயாரிப்பதே இவர்கள் நோக்கம்.
இதுகுறித்து நோக்கா ரோபாட்டிக்ஸ் நிறுவனர்களில் ஒருவரான நிகில் குரேல் கூறியதாவது:
''வென்டிலேட்டர் என்பது செயற்கை சுவாசக் கருவி. இது தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும் மீட்கவும் அவகாசம் அளிக்கிறது. அதை மிகச் சரியாகத் தரக்கூடிய சிறிய அளவிலான வென்டிலேட்டரை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.
நாங்கள் உருவாக்கும் வென்டிலேட்டர்களுக்கு ரூ.50,000க்கும் குறைவாகவே செலவாகும். இது ஒரு முழுமையான வென்டிலேட்டர் அல்ல. இது குறிப்பாக கோவிட்-19 நோயாளிகளுக்கு மட்டுமே. அவர்களுக்குத் தேவையான அம்சங்களைக் கொண்டுள்ளது.
வென்டிலேட்டர்களை உருவாக்க, ஒரு கோவிட்-19 நோயாளிக்கு சரியாக என்ன நடக்கிறது என்று என்பதற்காக மருத்துவர்களுடன் நாங்கள் தொடர்பு கொண்டோம். எங்களுக்கு விளக்கமளித்த மருத்துவர் கூறுகையில், ''ஒரு கோவிட்-19 நோயாளி கடுமையான சுவாசக் கோளாறு நோய்க்குறி ARDS ஐ உருவாக்குகிறார். இது நுரையீரல் சரிவதைக் குறிக்கிறது. நுரையீரல் பலவீனமாக உள்ளது. கோவிட- 19 பாதிக்கப்பட்ட ஒருவர் சுவாசிக்க உதவ தனது தசைகளை நம்ப முடியாது. அந்த சோர்வைத் தவிர்ப்பதற்காக நோயாளிக்கு செயற்கையான வென்டிலேஷன் உபகரணம் தேவை'' என்றார்.
இப்போது நாள் ஒன்றுக்கு 30 - 40 வென்டிலேட்டர்களை தயாரிக்கும் அளவுக்கு நாங்கள் முன்னேறி வருகிறோம். மேலும் பல சோதனைகள் செய்யப்படும், மதிய உணவுக்கு முன் அனைத்து மருத்துவப் பரிசோதனைகளும் செய்யப்பட்டு அனைத்து விதிமுறைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை உறுதி செய்வோம். இந்தியாவின் தேவையில் எங்களால் இயன்ற அளவு வென்டிலேட்டர்களை நிச்சயம் பெருமளவில் தயாரித்து வழங்குவோம்.
பல நாடுகளில் வென்டிலேட்டர்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அனுமதிக்கப்படவில்லை. இதனால் சந்தையில் ஏற்பட்டுள்ள இடைவெளியைத் தவிர்க்கவே நாங்கள் விரும்புகிறோம்''.
இவ்வாறு நிகில் குரேல் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
12 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago