கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரானுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மனிதர்களின் உயிரை பறித்து வருகிறது. இத்தாலி, ஸ்பெயினை தொடர்ந்து, இந்த வைரஸால் அதிக அளவில் பாதிப்புக்குள்ளான நாடாக பிரான்ஸ் இருக்கிறது. அங்கு கரோனா தொற்றுக்கு இதுவரை 3,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். லட்சக்கணக்கான மக்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பிரான்ஸ் அதிபர்இமானுவேல் மெக்ரானுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், கரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு ஆழந்த இரங்கல்களை தெரிவித்தார்.
பின்னர், கரோனா வைரஸை எதிர்கொள்ள உள்நாட்டு ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் எத்தகைய வழிமுறைகளை கையாள வேண்டும் என்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
மேலும், வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான முக்கியதகவல்களை இரு நாடுகளைச்சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதற்கான நடவடிக்கையை எடுக்கவும் இரு நாட்டு தலைவர்கள் ஒப்புக் கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago