கரோனா முன்னெச்சரிக்கை: உத்தவ் தாக்கரேயுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை

By செய்திப்பிரிவு

நாட்டிலேயே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள மாநிலமாக மகாராஷ்டிர உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை பணிகளை வேகப்படுத்துவது தொடர்பாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரேயுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.

கரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. இதைத் தடுக்கும் முயற்சியில் மக்களை வீடுகளில் தனிமைப்படுத்தவும், சமூக இடைவெளியை உருவாக்கவும் 21 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் மக்கள் கரோனாவால் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவோர், அறிகுறிகளுடன் கண்காணிப்பில் இருப்போர் அதிகரித்து வருகின்றனர். இதில் முதன்மையான மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.

இதையடுத்து மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்ரேயுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். அப்போது நாட்டிலேயே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள மாநிலமாக மகாராஷ்டிர உள்ள நிலையில் தற்போதைய நிலவரம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். மேலும் முன்னெச்சரிக்கை பணிகளை வேகப்படுத்துவது குறித்தும் உத்தவ் தாக்கரேயுடன் அவர் ஆலோசித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

39 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்