கரோனா நோயாளிகளை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவலியர்கள், துப்புரவு பணியாளர்கள் உயிரிழந்தால் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. இதைத் தடுக்கும் முயற்சியில் மக்களை வீடுகளில் தனிமைப்படுத்தவும், சமூக இடைவெளியை உருவாக்கவும் 21 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் மக்கள் கரோனாவால் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவோர், அறிகுறிகளுடன் கண்காணிப்பில் இருப்போர் அதிகரித்து வருகின்றனர்.
இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியதாவது:
‘‘கரோனா நோயாளிகளை குணப்படுத்தும் நடவடிக்கையில் ஏராளமான மருத்துவர்கள், செவலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
» டெல்லி மாநாட்டில் பங்கேற்றதாக தவறான தகவலை பரப்புவதா? - ஆந்திர துணை முதல்வர் கண்டனம்
» இந்தியாவில் கரோனா தொற்று ‘பாசிட்டிவ்’ எண்ணிகை 1,500-ஐக் கடந்தது; பலி எண்ணிக்கை 49
அதுபோலவே சுகாதார பணிகளில் ஏராளமான
துப்புரவு தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகளின் போது அவர்களுக்கு மரணம் ஏற்பட்டால் அவர்களது குடும்பங்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும்.
அரசு மற்றுமின்றி தனியார் துறை ஊழியர்களும் கரோனா ஒழிப்பு நடவடிக்கையின்போது உயிரிழந்தால் அவர்கள் குடும்பங்களுக்கும் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்’’ எனக் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
52 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago