கரோனா அல்லது கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு அரசு தனது கவனத்தை கரோனா தொற்றின் மையமாகத் திகழும், ‘ஹாட்ஸ்பாட்கள்’ என்று அழைக்கப்படும் நாட்டின் பகுதிகளின் மீது திருப்பியுள்ளது. இதுவரை இந்தியாவில் 1500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட 49 பேர் பலியாகியுள்ளனர்.
டெல்லி, உ.பி, கேரளா, மகாராஷ்ட்ர மாநிலங்களில் தலா 2 ஹாட்ஸ்பாட்க்ளும், குஜராத் மற்றும் ராஜஸ்தானில் தலா 1 வைரஸ் ஹாட்ஸ்பாட்டும் கண்டறியப்பட்டுள்ளன.
டெல்லி
நிஜமுதீன் மேற்கு:
» தேர்வு எழுதாமலேயே பள்ளி மாணவர்கள் 'பாஸ்': சத்தீஸ்கர் அரசு முடிவு
» துப்புரவுத் தொழிலாளிக்கு ரூபாய் நோட்டு மாலை: மக்கள் மனம் மாறியுள்ளதாக பஞ்சாப் முதல்வர் நெகிழ்ச்சி
14ம் நூற்றாண்டு சூஃபி அனுபூதி இறைநம்பிக்கையாளர் கவாஜா நிஜாமுதீன் அவ்லியா மசூதி உள்ள இடமான இது கரோனா மையமாக உருவாகியுள்ளது. அதாவது பல ஊர்களுக்கும் பரப்புவதில் இது மையமாகியுள்ளது. இங்கு தப்ளிகி ஜமாத் வழிபாட்டுக்காக மார்ச் 1 முதல் 15ம் தேதி வரை பலர் கூடினர். இங்கு கூடியதில் 6 பேர் தெலங்கானாவிலும் ஒருவர் ஜம்மு காஷ்மீரிலும் மரணமடைந்தனர். டெல்லியில் மட்டும் 24 பேர் இங்கு வந்து சென்றவர்களில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது போக வழிபாட்டில் ஈடுபட்ட 441 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெஸ்ட் ரிப்போர்ட்கள் வரவர இந்த மசூதி வழிபாடு வைரஸை எப்படிப் பரப்பியது என்ற விவரங்கள் வெளிவரும்.
தில்ஷத் கார்டன்
வடகிழக்கு டெல்லி பகுதியான இது பெண் ஒருவர் துபாய் சென்று திரும்பி கரோனா தொற்று ஏற்பட தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது, இஅர் மூலம் மகளுக்கும் இரண்டு உறவினர்களுக்கும் பரவியுள்ளது.
மாஜ்பூரில் உள்ள மொஹல்லா கிளினிக் மருத்துவருக்கும் கரோனாவை அளித்தது இவர்தான். இவர் மனைவிக்கும் தொற்றியது, இந்த மருத்துவரைப் பார்க்க வந்த நோயாளிகள் பலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், பலர் தடம் காணப்பட்டு வருகின்றனர்.
தில்ஷ்த் கார்டன் டெல்லியில் ஷாரதா மாவட்டத்தின் கீழ் வருகிறது, இந்த மாவட்டத்தில் இதுவரை 11 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
ராஜஸ்தான்:
பில்வாரா:
ராஜஸ்தானில் 83 பேருக்கு கரோனா பாசிட்டிவ் ஆனதில் 26 பேர் இந்த ஜவுளி உற்பத்தி நகரத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள், சிகிச்சைக்குப் பிறகு 8 பேருக்கு நெகெட்டிவ் ஆனது.
பில்வாராவில் இதுவரை 1,194 சாம்பிள்கள் எடுக்கப்பட்டுள்ளன என்ரு சுகாதாரத் துறை தெரிவிக்கிறது.
பெரிய அளவில் இங்கு ஸ்க்ரீனிங் நடைபெற்று வருகிறது. சுமார் 26 லர்சம் பேர்களுக்கு இங்கு ஸ்க்ரீனிங் நடைபெற்று வருகிறது.
2 கொரோனா வைரஸ் பலிகள் இதுவரை ஆகியுள்ளது. இதுவும் பில்வாராவில்தான் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்தான் முதல் கேஸ். பெரும்பாலான கரோனா நோயாளிகள் இங்கு மருத்துவமனை ஊழியர்கள் அல்லது மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குச் சென்றவர்களாகவே இருக்கின்றனர்.
உத்தரப்பிரதேசம்
நொய்டா:
டெல்லியை அடுத்த மேற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள கவுதம் புத்தா நகரில் இதுவரை 38 கொரோனா தொற்று நோய்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த மாநிலத்தில் இதுதான் அதிக பாதிப்பு எண்ணிக்கை கொண்டது.
இந்த 38 நோயாளிகளில் 24 நோயாளிகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தனியார் நிறுவனம் ஒன்று காரணமாகியுள்ளது, இந்த நிறுவனத்தின் மீது மக்கள் வாழ்க்கையை உயிரை அச்சுறுத்துவதாக வழக்கு தொடரப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
626 சாம்பிள்கள் இங்கு சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது, 1852 பேர் கண்காணிப்பில் உள்ளனர், நொய்டாவில் பல்வேறு இடங்களில் 291 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கவுதம புத்தர் நகரிலிருந்து 6 நோயாளிகள் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் 32 பேர் கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மீரட்: இது ஒரு மேற்கு உத்தரப்பிரதேச மாவட்டமாகும், இதுவும் உ.பி.யின் 2வது ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது. இங்கு 100 பேருக்கு மேல் கரோனாவுக்காக அனுமதிக்கப்பட்டதில் 19 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. திங்களன்று சோதனை முடிவுகள் வெளியான 17 பேர்களில் 6 பேர்களுக்கு உறுதியானது. இந்த 6 பேர்களில் 4 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
மகாராஷ்டிரா
மும்பை:
இங்கொன்றும் அங்கொன்றுமாக மக்களை ஆங்காங்கே கரோனா சோதனைக்குட்படுத்தியதில் சிலபல பேர்களுக்கு கரோனா இருப்பது தெரியவர, மாநில சுகாதார துறை கொலிவாடா என்ற வொர்லி பகுதியையும் கொரேகான் புறநகர் பகுதியையும் இரண்டு ஹாட்ஸ்பாட்களாக அடையாளம் கண்டுள்ளது.
மும்பையில் 8 பேர் பலியாகியுள்ளனர், 167 பாசிட்டிவ் கேஸ்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதுவரை மகாராஷ்ட்ராவில் 230 கோவிட்-19 கேஸ்கள் பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டுள்ளன. இதில் 10 பேர் பலியாகியுள்ளனர். 39 பேர் மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தில் 181 பேர் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புனே:
புனேயில் 46 பேருக்கு செவ்வாயன்று கொரோனா தெரியவந்துள்ளது. மகாராஷ்ட்ராவில் முதல் 2 கேஸ்களே பாசிட்டிவ் என்று வந்தது புனேயில்தான்.
புனேயில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கோவிட்-19னால் ஒன்றுக்கும் மேற்பட்ட உடல் உள்ளுறுப்புகள் செயலிழந்து ஒருவர் பலியாகியுள்ளார்.
இதுவரை அயல்நாட்டு பயணம் செய்த அவர்களுடன் தொடர்புடைய சுமார் 3, 500 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
2,216 பயணிகள் கண்காணிப்பில் உள்ளனர், இதில் 1,403 பேர் தங்களது 14 நாட்கள் தனிமைக் காலக்கட்டத்தை நிறைவு செய்தனர், 813 பேர் இன்னமும் கண்காணிப்பில் உள்ளனர்.
குஜராத்
அகமதாபாத்
குஜராத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட 73 கரோனா தொற்றுக்களில் 23 பேர் அகமதாபாத்தில் உள்ளவர்கள். குறிப்பாக அகமதாபாத் நகரில் உள்ளவர்கள்.
குஜராத்தின் 6 கரோனா மரணங்களில் 3 பேர் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள். 5 பேர் குணமடைந்தவர்களில் 4 பேர் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள்.
அகமதாபாத் நகரம் ஹாட்ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது , நோயாளி ஒருவர் இருக்கும் பகுதியில் 3 கிமீ சுற்றுப்பரப்புக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இங்கு மொத்த லாக்-டவுன் தான். சுகாதார பணியாளர்கள் தவிர யாரும் உள்ளே நுழையவும் வெளியே வரவும் முடியாது.
கேரளா
காசர்கோடு
கேரளா காசர்கோடு மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாகும். இங்கு பாசிட்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 99, 7,725 பேர் கண்காணிப்பில் உள்ளனர். 163 பெர் தனிமைப்பிரிவு வார்டுகளில் உள்ளனர்.
ஏற்கெனவே தொற்றியவர்களுடனான தொடர்பு மற்றும் அயல்நாட்டிலிருந்து திரும்பியவர்கள் என்று வைரஸ் மளமளவென பரவியுள்ளதில் காசர்கோடு முதலிடம் வகிக்கிறது.
பத்தனம்திட்டா
பத்தனம்திட்டாவில் 5 பேர்கள்தான் பாசிட்டிவ் என்றாலும் சுமார் 7,254 பேர் கொரோனா கண்காணிப்பில் இருப்பதால் இது ஹாட்ஸ்பாட்டாகியுள்ளது. இதுவரை இந்த இரண்டு மாவட்டங்களிலிருந்தும் கரோனா பலி ஏற்படவில்லை என்றாலும் பாதிப்பு கணிப்பை பொறுத்தவரை ஹாட்ஸ்பாட்டாக உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
31 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago