மத்திய சுகாதாரத் துறை இணைச்செயலாளர் லவ் அகர்வால் டெல்லியில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது டெல்லியின் நிஜாமுத்தீனில் நடைபெற்ற இஸ்திமா குறித்து ஒருகேள்வி எழுந்தது இதுகுறித்து அவர் கூறியதாவது:
கரோனா வைரஸை பரப்பியது யார் எனக் கண்டறிய இதுநேரம் அல்ல. அதை தடுக்கும்நடவடிக்கைகளை பாராட்டுவதே சிறந்தது. கரோனா பரவும்எண்ணிக்கையை அவ்வப்போதுவெளியிடுவதால் பலனில்லை.
அதன் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார். இதனிடையே, தப்ளிக்-எ-ஜமாத்தின் சர்வதேச தலை
மையகமான மர்கஸ் சார்பில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், ‘ஒரு வருடத்திற்கு முன்பாகவே இஸ்திமாக்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது. 21-ம் தேதி கிளம்பஇருந்தவர்கள் ஊரடங்கு அறிவிப்பினால் பயணங்களை ரத்து செய்துவிட்டனர்.
மார்ச் 27 முதல் அரசு துவக்கிய கரோனா மருத்துவப் பரிசோதனைக்கு அனைவரும் முழுஒத்துழைப்பு அளித்தனர். 100 ஆண்டுகள் பழமையான எங்கள் அமைப்பு, அரசிற்கும், அதன் சட்டத் திட்டங்களுக்கும் ஒத்துழைப்பு அளிப்பதில் இந்த அமைப்பு மீது இதுவரை களங்கம் வந்ததில்லை. வரும் நாட்களில் கோவிட் 19 இல் இருந்து தப்ப அரசிற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
20 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago