கரோனா பாதிப்புக்கு சிகிச்சை: 20000 ரயில் பெட்டிகளை தயார் செய்கிறது ரயில்வே

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க 20 ஆயிரம் ரயில் பெட்டிகள் தயார் படுத்தப்பட்டு வருவதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. இதைத் தடுக்கும் முயற்சியில் மக்களை வீடுகளில் தனிமைப்படுத்தவும், சமூக இடைவெளியை உருவாக்கவும் 21 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் மக்கள் கரோனாவால் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவோர், அறிகுறிகளுடன் கண்காணிப்பில் இருப்போர் அதிகரித்து வருகின்றனர். அவர்களுக்குப் போதுமான இட வசதியில்லை.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவால் ஏப்ரல் 14-ம் தேதிவரை பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாள்தோறும் 13 ஆயிரத்து 523 ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் அவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது காலியாக இருக்கும் பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன.

இதனால் ரயில் பெட்டிகளையும், கேபின்களையும் தனிமைப்படுத்துதலுக்கான மையங்களாக மாற்றும் பணியை ரயில்வே செய்து வருகிறது. இந்த பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றி அங்கிருந்து சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. இதற்காக மொத்தம் 20 ஆயிரம் ரயில் பெட்டிகள் கரோனா சிகிச்சைக்காக தயார் செய்யப்பட்டு வருவதாக ரயில்வே அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்