மும்பையில் 10 ஆயிரம் சானிட்டைசர்ஸ் பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அச்சம் காரணமாக கடைகளுக்கு மருந்து உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக வந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகின்றனர்.
நாடுமுழுவதும் கரேனா தொற்று வேகமாக பரவி வருவதால் முககவசம், சானிட்டடைசர்ஸ் போன்றவற்றுக்கு பெரிய அளவில் தேவை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் மும்பையில் சார்கோப் பகுதியில் ஏராளமான அளவு கையை சுத்தம் செய்யும் சானிட்டைசர்ஸ்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த கட்டடத்திற்கு சென்று சோதனையிட்ட போலீஸார் 10 ஆயிரம் சானிட்டைசர்ஸ் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago