கரோனா வைரஸைத் தடுக்க 21 நாட்கள ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், அதுதொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் மக்கள் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளனர்.
ஐஏஎன்ஸ் செய்தி நிறுவனமும், சி-வோட்டர்ஸ், சர்வதேச கரோனா கண்காணிப்பு மையமும் இணைந்து கடந்த 26 மற்றும் 27 தேதிகளில் மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளனர்.
இதில் கரோனா வைரஸ் தொடர்பான சந்தேதகங்கள், தகவல்களுக்கு எந்த வகையான ஆதாரங்களை நம்பி இருக்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு, “ 74.1 சதவீதம் பேர் பாரம்பரியமாக ஊடகங்கள் மூலம்தான் தகவல்களை அறிகிறோம் எனத் தெரிவித்தனர். 18.5 சதவீதம் பேர் சமூக ஊடகங்கள் மூலமும், 5.2 சதவீதம் பேர் மக்களுக்கு இடையே பகிரப்படும் தகவல்கள் மூலம் அறிவதாகத் தெரிவித்தனர்.
» கரோனா வைரஸ் அச்சம்: 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா?- மத்திய அரசு பதில்
» மனதின் குரல் நிகழ்ச்சியின்போது குணமடைந்தவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
67.9 சதவீதம் மக்கள் தொலைக்காட்சி வாயிலாகவும், 6.2 சதவீதம் பேர் நாளேடுகள் மூலமும் கரோனா வைரஸ் குறித்து அறிந்து கொள்வதாகத் தெரிவித்தனர். 5.1 சதவீத மக்கள் வாட்ஸ் அப் வாயிலாகவும், 4 சதவீதம் ஃபேஸ்புக் மூலமும் தகவல்களை அறிந்துகொள்வதாகத் தெரிவித்தனர்.
2.7 சதவீதம் பேர் உள்ளூர் நிர்வாகத்தையும், 2.5 சதவீதம் பேர் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் கூறும் தகவல்கள் மூலம் கரோனா குறித்து அறிவதாகத் தெரிவித்தனர்.
21 நாட்கள் லாக்-டவுனில் இருக்கும்போது எத்தனை வாரங்களுக்கு உணவுப் பொருட்கள், பணம், ரேஷன் பொருட்கள், மருந்துகள் வாங்கி இருப்பு வைத்துள்ளீர்கள் என்று மக்களிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு மளிகைப் பொருட்கள், மருந்துகள் அனைத்தையும் 3 வாரங்களுக்குக் குறைவில்லாமல் இருப்பு வைத்துள்ளதாக 68.7 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். 31.4 சதவீதம் பேர் 3 வாரங்கள் தேவைக்கும் அதிகமான உணவுப்பொருட்கள், பணம் இருப்பு வைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.
12.2 சதவீத இந்தியர்கள் அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே ஒரு வாரத்துக்கும் குறைவாக இருப்பு வைத்திருப்பதாகத் தெரிவித்தனர். 37.3 சதவீதம் பேர் ஒருவாரத்துக்கும் குறைாவகவும், 19.2 சதவீதம் பேர் 2 வாரத் தேவைக்கும் அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
3 வாரத்துக்கு தேவையான உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்களை 6.2 சதவதீதம் பேரும், ஒரு மாதத்துக்குத் தேவையான பொருட்களை 15.6 சதவீதம் பேரும் இருப்பு வைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.
மூன்றாவதாக கரோனா வைரஸ் தொற்று மக்களிடம் எவ்வாறு எடுத்துக்கூறப்பட்டுள்ளது, மிகைப்படுத்தப்பட்டுள்ளதா என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர்கள் பதிலில், “45.8 சதவீதம மக்கள் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு, தகவல் ஏதும் மிகைப்படுத்தப்படவில்லை. 44.3 சதவீதம் பேர் கரோனா குறித்த அச்சம் மிகைப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்தக் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago