மனதின் குரல் நிகழ்ச்சியின்போது குணமடைந்தவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

By செய்திப்பிரிவு

மனதின் குரல் நிகழ்ச்சியின்போது, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் கலந்துரையாடினார். இதில் ஒருவர் ராமகம்பா தேஜா. தகவல் தொழில்நுட்ப நிபுணர். அவர் தனது அனுபவத்தை பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:

நான் ஐ.டி. நிறுவன ஊழியர். பணி நிமித்தமாக துபாய்க்கு சென்றேன். நாடு திரும்பிய பிறகு எனக்கு காய்ச்சல் ஏற்பட்டது. 5 நாட்களுக்குப் பிறகு எனக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது கரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டது. ஹைதராபாத் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். 14 நாட்களுக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்பினேன்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பயமாக இருந்தது. ஆனால் மருத்துவர்களும் செவிலியர்களும் எனக்கு ஆறுதலாக இருந்தார்கள். கரோனா வைரஸ்காய்ச்சலில் இருந்து குணமடைந்தபிறகு எல்லையில்லாத மகிழ்ச்சி அடைந்தேன். வீடு திரும்பிய பிறகும் தனிமையில் இருந்தேன். சோப்பு போட்டு கை கழுவும் பழக்கத்தை இப்போதும் தவறாமல் பின்பற்றுகிறேன்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆக்ராவை சேர்ந்த அசோக்கபூர் குடும்பத்தில் 6 பேர்கரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். டெல்லி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையில் அனைவரும்குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பிரதமர் மோடியுடன், அசோக் கபூர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:

ஆக்ரா பகுதியில் நாங்கள் காலணி தயாரிக்கும் ஆலையை நடத்துகிறோம். இத்தாலியில் நடந்த காலணி கண்காட்சியில் எனது 2 மகன்களும் மருமகனும் கலந்து கொண்டனர். அவர்கள் அண்மையில் நாடு திரும்பினர். டெல்லியில் வசித்த எனது மருமகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது.அவர் டெல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுரைப்படி நானும் எனது குடும்பத்தினர் அனைவரும் ஆம்புலன்ஸில் டெல்லி மருத்துவமனைக்கு சென்றோம். நான், எனது மனைவி, 2 மகன்கள், 16 வயது பேரனுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

தனித்தனி அறைகளில் எங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்களின் தீவிர சிகிச்சையில் அனைவரும் குணமடைந்து வீடுதிரும்பிவிட்டோம். எங்களுக்குசிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டெல்லி அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் நிதேஷ் குப்தா, பிரதமர் நரேந்திர மோடியுடன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:

கரோனா வைரஸ் காய்ச்சலால்பாதிக்கப்படும் நோயாளிகள் அச்சப்படுவது இயல்பு. முதலில்அவர்களுக்கு நம்பிக்கையூட்டுவோம். உயர்தரமான மருத்துவ சிகிச்சைகளை அளிப்போம். மருத்துவர்களின் அறிவுரைகளை நோயாளிகள் முழுமையாக பின்பற்றும்போது காய்ச்சலில் இருந்து விரைவில் குணமடைய முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவின் புனே நகரை சேர்ந்த மருத்துவர் போர்ஸ் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடினார். அவர் கூறியதாவது:

புனேவில் உள்ள எங்களதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 16 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பொதுமக்கள் அனைவரும் 6 அடி இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். அடிக்கடி சோப்பு போட்டு கைகளைக் கழுவ வேண்டும். தும்மும்போதும் இருமும்போதும் கைக்குட்டையால் முகத்தை மூடிக் கொள்ள வேண்டும். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் போதும். கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

குணமடைந்த நோயாளிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடிவாழ்த்துகளைத் தெரிவித்தார். அதேபோல உயிரை பணயம் வைத்து தன்னலமின்றி சேவையாற்றி வரும் மருத்துவர்களுக்கு அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

45 mins ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்