வங்கிகளில் போதிய அளவு நிதி புழக்கம் உறுதி செய்யப்படும், இதுதொடர்பாக அனைத்து வங்கியாளர்களிடமும் பேசப் போவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அனைத்து தரப்பினருக்கும் போதிய அளவு நிதி கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் நிதிப் புழக்கம் போதிய அளவு இருப்பதை உறுதி செய்ய அனைத்து மாநில அரசுகளுடன் பேசப் போவதாகவும், பணம்எடுத்துச் செல்வதில் வங்கியாளர்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது என்பதை உறுதி செய்வதாகவும், ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
நாடு முழுவதும் நிலவும் இக்கட்டான சூழலில் வங்கியாளர்களின் செயல்பாடுகள் மிகவும் பாராட்டுக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார். அதேசமயம் போதிய நிதிப் புழக்கம் இருப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஏழை மக்களுக்கு நேரடி பண உதவி (டிபிடி) அளிக்கப்பட்டுள்ளது. மேலும் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவவும் நிதி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மிகவும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமின்றி வங்கிக் கிளைகளுக்கு வருவதைத் தவிர்க்குமாறு ஐபிஏ கேட்டுக் கொண்டுள்ளது. வங்கிகளில் உள்ள கவுன்ட்டர் உள்ளிட்டவற்றை தொடுவதை தவிர்க்குமாறும் வங்கிப் பணியாளர்களுடன் குறிப்பிட்ட இடைவெளி விட்டு தங்களதுதேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கிகளில் 1 மீட்டர் முதல் 1.5 மீட்டர் இடைவெளி விட்டு வாடிக்கையாளர்கள் நிற்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago