கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்துக்கு நிதியுதவி அளித்த மாணவருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி
கரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸுக்கு 900-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர். 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்திருப்பதால், இந்தியா முழுவதும் அத்தியாவசிய பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணிகளுமே நடக்கவில்லை.
இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான செலவுகள் என பல்வேறு சிக்கல்களில் தற்போது இந்தியா சிக்கியுள்ளது. இதனைச் சமாளிக்க PM CARES Fund-க்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் மோடி தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு மூலமாக ட்வீட் செய்தார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி அறிவித்த வங்கிக் கணக்கிற்குப் பலரும் நிதியுதவி அளிக்கத் தொடங்கினார்கள். இதில் சிலர் 500 ரூபாய், 1000 ரூபாய் எனவும் அனுப்பிவிட்டு, அதன் விவரத்தை மோடியின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு வெளியிட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்து வருகிறார்.
» கரோனாவும் காசர்கோடும்: கேரளாவின் புதிய ஹாட் ஸ்பாட் : 10-ம் வகுப்பு மாணவியால் பள்ளிக்கூடமே பதற்றம்
சாஹில் குலியா என்ற மாணவர் 1000 ரூபாய் அனுப்பிவிட்டு, பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு "மாணவனாக இந்த தேசத்துக்கு என்னால் முடிந்த சிறு உதவி" என்று தெரிவித்தார். அவருக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடி, "தேசத்தின் எதிர்காலம், நாட்டின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க உறுதி செய்கிறது. அற்புதமான செயல் சாஹில். உன்னை நினைத்துப் பெருமை கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
சையத் அட்டூர் ரஹ்மான் என்பவர் 501 ரூபாய் அனுப்பிவிட்டு, பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு சின்ன உதவி என்று தெரிவித்தார். அவருக்குப் பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடி "சின்னது பெரிய என்று எதுவுமில்லை. ஒவ்வொரு தொகையும் முக்கியமே. கோவிட் 19ஐ வீழ்த்த நாம் ஒன்றுபட்டு உறுதியுடன் இருப்பதையே இது காட்டுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து, பல்வேறு தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள் என உதவிகள் செய்யத் தொடங்கியுள்ளனர்.
There’s nothing big or little.
Every single contribution matters. It shows our collective resolve to defeat COVID-19. #IndiaFightsCorona https://t.co/ibCnvGNIyo— Narendra Modi (@narendramodi) March 28, 2020
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago