ஊரடங்கு எதிரொலி; ஏழைகளுக்காக ரூ. 2,200 கோடி உதவி திட்டம்: ஒடிசா அரசும் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கரோனா தொற்றை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்காக 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு திட்டத்தை ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடரந்து உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவிப்பு படி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் பல்வேறு மாநிலங்களில் மருத்துவர்கள் உட்பட சுகாதாரத்துறை பணியாளர்கள் அனைவரும் இரவும் பகலும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதாலும், கரோனா தொற்று குறித்த சோதனையாலும் கூடுதலாக மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதுபுறம் என்றால் ஊரடங்கு உத்தரவால் ஏழை எளிய மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடைகள் அடைக்கப்பட்டு, தொழிற்சாலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெருமளவில் பாதிக்கும் என்ற கவலை எழுந்துள்ளது.

வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு நிதித் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுபோலவே பல்வேறு மாநில அரசுகளும் இதேபோன்ற திட்டங்களை அறிவித்து வருகின்றன.

அந்தவகையில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்காக 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு திட்டத்தை ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது.

இதன்படி ஏழை மக்கள், தொழிலாளர்கள் பயன் பெறும் வகையில் நிதியுதவி அளிக்கபபடுகிறது. அதுபோலவே அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

மேலும்