கரோனா வைரஸை குணப்படுத்த 69 மருந்துகள் கண்டுபிடிப்பு?

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்த 69 மருந்துகள் மற்றும் சோதனை அடிப்படையிலான மருந்து கலவைகளை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த சர்வதேச விஞ்ஞானிகள் குழுவில் இந்திய வம்சாவளிவிஞ்ஞானிகளும் இடம்பெற்றுள்ளனர்.

இதில் சில மருந்துகள் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றை குணப்படுத்த ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக அறிவியல் அறிஞர்கள் ஜினா டி நுயென், அத்வைத் சுப்ரமணியன், ஸ்ரீவத் வெங்கடரமணன், ஜோதி பத்ரா உள்ளிட்டோர் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இவர்களின் ஆய்வு ஓர் இணைய இதழில் வெளியாகியுள்ளது.

கரோனா வைரஸின் 29 மரபணுக்களில் வைரஸ் புரதங்களை நேரடி உற்பத்தி செய்யும்26 மரபணுக்களை இந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர். மனித புரதங்களுடன் இந்த வைரஸ் புரதங்கள் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதை கண்டறிய மனித செல்களில் ஆய்வு மேற்கொண்டனர். கரோனா வைரஸ் புரதங்களுடன் 332 மனித புரதங்கள் தொடர்புகொள்வதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இந்த புரதங்களே உலகம் முழுவதும் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உயிரிழப்புக்கு காரணம் என இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த புரதங்களுக்கு எதிராக69 மருந்துகள் மற்றும் சோதனை அடிப்படையிலான மருந்து கலவைகளை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இதில் சில மருந்துகள் இரண்டாம் வகைநீரிழிவு நோய், புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றை குணப்படுத்த ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள மருந்துகளாகும்.

கரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்த இதுவரை நேரடி மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் இந்த மருந்துகள் மற்றும் மருந்து கலவைகள் அதனை குணப்படுத்த வாய்ப்புள்ளதாக இந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்