கரோனா வைரஸ் நோயாளிகள் ஒருவர் கூட இல்லாத ஜார்கண்ட் மாநிலத்தில் 21 நாட்கள் ஊரடங்கால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் கருதி 2 மாத ரேஷன் பொருட்களை முன்கூட்டிேய வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ஜார்கண்ட் மாநில அரசின் இந்த முடிவால் மாநிலத்தில் உள்ள 90 சதவீத மக்களும் பயன் பெறுவார்கள்
ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக ஹேமந்த் சோரன் இருந்து வருகிறார்.
இந்தியாவில் இதுவரை கரோனா வைரஸால் 13 பேர் உயிரிழந்துள்ளா், 681 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் ஜார்கண்ட் மாநிலத்தில் மட்டும் இதுவரை எந்த நோயாளிகளும் பாதிக்கப்படவில்லை.
இதுவரை கரோனா அறிகுறிகளுடன் இருந்த 77 பேரின் ரத்த மாதரிகளைப் பரிசோதித்தோம், அதில் 61 பேருக்கு கரோனா இல்லை. 16 பேரின் முடிவுகள் இன்னும் வரவில்லை. கரோனா இல்லாத மாநிலமாக இருந்து வருகிறது
இந்நிலையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் ஏழைமக்கள்,விவசாயிகள், சமூகத்தில் நலிந்த பிரிவனர் வருமானம் கிடைக்காமல் பெரும் துன்பத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இவர்களுக்கு உதவும் வகையில் அடுத்த 2 மாதங்களுக்கான ரேஷன் பொருட்கள் முழுவதையும் முன்கூட்டியை வழங்கப்படும் என ஜார்கண்ட் அரசு அறிவித்துள்ளது.
ேமலும் போதுமான அளவு உணவுப் பொருட்கள் இருப்பு இருப்பதால், பற்றாக்குறை ஏற்படும் என்று மக்கள் அஞ்சத் தேவையில்லை.
மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக வெஜ்ஜிகோ எனும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம்மக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை ஆர்டர் செய்தால் வீட்டுக்கே பொருட்கள் டெலிவரி ெசய்யப்படும் என மாநில அரச அறிவித்துள்ளது
முக்கிய செய்திகள்
இந்தியா
50 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago