டெல்லி மொஹல்லா கிளினிக் மருத்துவருக்கு கரோனா பாசிட்டிவ்: சுய தனிமையில் 1,100 பேர்

டெல்லி மக்கள் நல மொஹல்லா மருத்துவமனையில் 49 வயது மருத்துவர் அவரது மனைவி, மகள் ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருடன் தொடர்பிலிருந்த சுமார் 1,100 பேர்களையும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லி சுகாதார துறை அதிகாரிகள் கூறும்போது, “இதுவரை அந்த மருத்துவரிடம் சிகிச்சை உள்ளிட்ட தொடர்பு வைத்துக் கொண்ட 900 பேரை அணுகியுள்ளோம். இதில் பலர் அவரின் நோயாளிகள் ஆவார்கள். 38 வயது பெண் ஒருவர் சவுதி அரேபியாவிலிருந்து திரும்பியவர் இந்த மருத்துவரிடம் வந்துள்ளார் அவரிடமிருந்து மருத்துவருக்கு நோய் தொற்றியுள்ளது தெரிய வந்தது.

இவருடன் சேர்த்து மொத்தம் 1400 பேர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியிருக்கிறோம். துபாய் பெண்ணின் வீட்டினருகில் இருக்கும் 500 வீடுகளைச் சேர்ந்தவர்கள் இவர்கள்” என்றார்கள்.

மருத்துவருடன் தொடர்பிலிருந்த 8 பேருக்கு ஏற்கெனவே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து மொஹல்லா கிளினிக்குகள் மூடப்படும் என்ற வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த கேஜ்ரிவால் அவை திறந்திருக்கும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE