உணவுப்பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறி வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடரந்து உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவிப்பு படி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் அத்தியாவசியப் பொருட்கள் தவிர மற்ற அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேசமயம் மருத்துவம் உள்ளிட்ட சேவைகளுக்கு எந்த தடையும் இல்லை. காய்கறிகள், பழங்கள், பலசரக்கு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
» காணொலியில் சிகிச்சை: எய்ம்ஸ் மருத்துவமனை முடிவு
» கரோனா தொற்று பிரச்சினை; என்பிஆர் - மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒத்திவைப்பு: மத்திய அரசு அறிவிப்பு
இந்தநிலையில் உணவுப்பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறி சமூகவலைதளங்களில் சிலர் வதந்தி பரப்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் சம்பந்தப்பட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
சிலர் திட்டமிட்டு வதந்தியை பரப்புவதன் மூலம் சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை எழுப்ப முயலுவதாகவும் அவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மாநில காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago