மலேரியா காய்ச்சல் எதிர்ப்பு மருந்து ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

By பிடிஐ

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்குநாள் அதிகரித்து வருவதையடுத்து மலேரியா காய்ச்சல் சிகிச்சைக்குப் பயன்படும் மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆய்வுக்குழு தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா கரோனா சந்தேக நோயாளிகள், உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதாரப் பணியாளர்கள் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் எடுத்துக் கொள்ள பரிந்துரை மேற்கொண்டார்.

இதற்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைமைக் கட்டுப்பாட்டாளர் அலுவலகமும் அனுமதியளித்தது. அவசரச் சூழ்நிலைகளில் மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டுக்கு இதனை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்து மற்றும் இதிலிருந்து தயாரிக்கப்படும் மற்ற மருந்துகளின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மனிதார்த்தப் பயன்களுக்காக அந்தந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப மத்திய வெளியுறவு அமைச்சக அனுமதியுடன் ஏற்றுமதிக்கு அரசு அனுமதிக்கும்.

சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் ஏற்றுமதி தொடர்பான யூனிட்கள் ஏற்றுமதிக்கு தடையில்லை, ஆனால் இந்த ஏற்றுமதி இந்தத் தடை அறிவிக்கைக்கு முன்கூட்டியே பெற்ற அனுமதிகளின் படி ஏற்றுமதி செய்யலாம். அதாவது மார்ச் 25, 2020 அன்று இதன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அல்லது முன்னமேயே இந்த மருந்துக்கான முழு தொகையையும் இந்திய ஏற்றுமதியாளர் பெற்று விட்டார் எனும் பட்சத்தில் அதற்கான தகுந்த ஆவணங்களைக் காட்டி அனுமதி பெற்று ஏற்றுமதி செய்யலாம்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குளோரோகுய்ன் மருந்து கோவிட்-19க்கு பயன்படுத்தலாம் என்று எப்போது கூறினாரோ அப்போது முதல் இந்த மருந்துக்கான கிராக்கி அதிகரித்துள்ளது. இதனையடுத்து மக்கள் மளிகை சாமான்களை வாங்குவது போல் இதையும் வாங்கத் தொடங்கியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்