கர்நாடகாவில் கரோனா வைரஸ் தாக்கிய 2 பேரை பெங்களூரு மருத்துவர்கள் வெற்றிகரமாக குணமாக்கியுள்ளதாக அம்மாநில மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்றுபெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடகாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு 76 வயது முதியவர் உயிரிழந்தார். பெங்களூரு, கல்புர்கி, குடகு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 17 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில்பெங்களூருவை சேர்ந்த 'டெல்' நிறுவன பொறியாளர் மற்றும் அவரது மனைவியும் அடங்குவர். இவர்கள் கடந்த 17 நாட்களுக்கு முன் பெங்களூருவில் உள்ள ராஜீவ் காந்தி அதிநவீன மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு, 12 பேர்கொண்ட மருத்துவக் குழுவினர்தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். தற்போது இருவரும் முழுமையாக குணமடைந்ததால், பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இன்னும் சில வாரங்களுக்கு வீட்டை விட்டு வெளியேசெல்ல வேண்டாம் எனவும் சத்தான உணவை உட்கொள்ளுமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருவரையும் வெற்றிகரமாக குணப்படுத்திய மருத்துவக் குழுவினருக்கு எனது பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மீதமுள்ள 15 நோயாளிகளுக்கு பெங்களூரு, கல்புர்கி, குடகு உள்ளிட்ட இடங்களில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கர்நாடகாவில் 20-க்கும் மேற்பட்டஇடங்களில் கரோனா வைரஸ்சோதனை மையங்கள் அமைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் சோதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளோருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் சுதாகர் ரெட்டி கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago