8 ஆண்டுகளுக்குப்பின் மருத்துவ மாணவி நிர்பயாவுக்கு நாளை காலை 5.30 மணிக்கு நீதி கிடைக்கப்போகிறது. இந்த நீதியைப் பெற நிர்பயா இந்த உலகில் இல்லாவிட்டாலும், இனிமேல் நிர்பயாக்கள் நிலை எந்த பெண்ணுக்கும் நேரக்கூடாது என்பதற்கு நாளைய விடியல் பாடமாக இருக்கும்.
2012, டிசம்பர் 16-ம் தேதி டெல்லியில் நடந்த அந்த துயரமான சம்பவம் நாட்டையே உலுக்கியது மருத்துவம் படித்துவந்த மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் 6 பேரால் கொடூரமாக பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு 13 நாள் சிகிசைச்கு பிறகு உயிரிழந்தார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட பவன் குப்தா, அக்சய் குமார் சிங், முேகஷ் சிங், வினய்குமார் ஆகிய 4-பேருக்குத்தான் 20ம் தேதி காலை 5.30 மணிக்குள் திஹார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. அதைப்பற்றிதான் பார்க்கப் போறோம்..
எப்படி தூக்கிலிடுவது:
» நாளை மரண தண்டனை உறுதி? நிர்பயா குற்றவாளி முகேஷின் மனுவைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
கைதிகளை தூக்கிலுடம் முறை கூட நமது சட்டத்தில் சொல்லட்டப்பட்டிருக்கு. குற்றவியல் நடைமுறைச்சட்டம் அதாவது சிஆர்பிசி 1973- பிரிவு 354(5)ன்படி ஒருவருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்துவிட்டால், அந்த நபரை சாகும்வரை தூக்குக் கயிற்றில் தொங்கவிடப்பட வேண்டும்.
கடந்த 30ஆண்டுகளில் ….
கடந்த 30 ஆண்டுகளில் மொத்தம் 16 பேருக்கு இந்தியாவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுருக்கு. 2004-ம் ஆண்டு தனஞ்செய் சாட்டர்ஜி(பாலியல்வழக்கு), மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் 2012-ம் ஆண்டும், நாடாளுமன்றத் தாக்கலில் துணைபோன அப்சல் குரு 2013-ம் ஆண்டும் தூக்கிலிடப்பட்டனர். அதன்பின் மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியான யாகூப் மேமன் 2015-ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். இவர்களைத் தவிர யாரும் தூக்கிலிடப்படவில்லை.
பெரும் பரபரப்பு …
கடந்த 2015-ம் ஆண்டு யாகூப் மேமனுக்கு நாக்பூர் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதுக்கு பிறகு 5 ஆண்டுகளுக்குப்பின் இப்போது இவர்கள் 4பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றப்படுகிறது
மேலும் கடந்த 1983-ம் ஆண்டுக்குப்பிறகு ஏறக்குறைய 37ஆண்டுக்குப்பின் ஒரே நாளில் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
மகாராஷ்டிராவை உலுக்கிய ஜோஷி-அபயங்கார் குடும்பத்தினர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு கடந்த 1983-ம் ஆண்டு மும்பை எர்ரவாடா மத்திய சிறையில் தூக்குத் தண்டனை ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டது.
தூக்குதண்டனைக்கான விதிகள், ஒத்திகைகள்
முதல்ல தூக்கு தண்டனைக்கான டெத் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டவுடனே இந்த 4 குற்றவாளிகளும் தனித் தனி செல்லில் அடைப்படுவார்கள்.
தூக்கிலிடுவதற்கு முன்னாடி குற்றவாளி விரும்பினால், அவருடைய உறவினர்கள், குடும்பத்தினரை கடைசியாக பார்க்க சிறைஅதிகாரிகள் ஏற்பாடு செய்து, கடைசி ஆசை ஏதேனும் இருந்தால் நிறைவேற்றுவார்கள்.
டெல்லி சிறைவிதிகள்படி தூக்கிலிடப்படும் நேரத்தை முடிவு செய்ய சிறையின் கண்காணிப்பாளருக்கு மட்டுமே முழு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கு. அவர் நேரத்தை முடிவு செய்தபின் அந்த அறிக்கைய காவல்துறை உயர்திகாரிகளுக்கும், குற்றவியல் நீதிமன்றத்துக்கும், அரசுக்கும் அனுப்பிவைப்பார்.
சிறைவிதிகளில் 872-பிரிவின்படி தூக்கு தண்டனை எப்போதும் அதிகாலைக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும், அதாவது சூரியன் உதயமாவதற்கு நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பதால் நாளை காலை 5.30மணிக்குள் நிறைவேற்றப்படும்
டெத்வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட பின், ஒவ்வொரு 4நாட்களுக்கு ஒருமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தூக்கு மேடையை பார்வையிட்டு ஆய்வு செய்யவார்கள். தண்டனை நிறைவேற்றுவதற்கு முதல்நாள்கூட பொதுப்பணித்துறை அதிகாரி, கண்காணிப்பாளருடன் சென்று தூக்கு மேடையை ஆய்வு செய்யவார்கள். தூக்கு மேடையை பார்க்கிறதுக்கு எந்த கைதிக்கும் அனுமதியில்லை.
அதேபோல தூக்கிலிடுவதற்கு பயன்படும் கயிறையும் ஆய்வு செய்யவேண்டும். புதிய கயிறு வாங்கணும்னு கட்டாயம் இல்லை, தேவைப்பட்டால் வாங்கிக்கொள்ளலாம். அந்த தூக்குக்கயிறு பருத்தி கயிறாகவோ அல்லது மணிலா கயிறாகவோ இருக்கணும்.
ஒத்திகை
கைதியின் உடல் எடைையவிட ஒன்றரை மடங்கு எடையில் உள்ள மணல்மூட்டையில் கயிறைக் கட்டி 1.83 மீட்டர் மற்றும் 2.44 மீட்டர் உயரத்தில தொங்கவிட்டு கயிறோட பலத்தை பரிசோதிப்பார்கள்.உதாரணமாக ஒரு குற்றவாளியின் எடை 45 கிலோவுக்கு குறைவாக இருந்தால், அவரை 2.44 மீட்டர் உயரத்தில் தொங்கவிடுவாங்கர், அவரின் எடை 90 கிலோவுக்கும் அதிகமாக இருந்தால், 1.83 உயரத்தில் தொங்கவிடுவாங்க. கயிற்றின் கடினத்தன்மையை மாற்ற கயிற்றில் வெண்ணை அல்லது மெழுகு தடவப்படும்.
தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு 4 நாட்களுக்கு முன், மருத்துவ அதிகாரி ஒருவர் வந்து கைதிகளின் உடல் எடையை கணக்கிட்டு, எத்தனை அடி உயரத்தில் உடல் தொங்கவிடப்பட வேண்டும் என்று தெரிவிப்பார்.
இந்த ஒத்திகை அனைத்தும் முடிஞ்சதுக்கு பிறகு அந்த கயிறு சுறுக்குகள் போடப்பட்டு, அடையாளம் வெச்சு, ஒரு பெட்டியில் வெச்சு பூட்டி சிறை கண்காணிப்பாளிடம் ஒப்படைப்படும்
யாரெல்லாம் உடன் இருக்கலாம்
சிறையின் கண்காணப்பாளர், துணைக் கண்காணிப்பாளர், சிறையின் மருத்துவ அதிகாரி, மருத்துவர் ஆகியோர் இருக்கலாம். கைதி வேண்டுகோள் விடுத்தால் அவர் சார்ந்திருக்கும் மதத்தின் அடிப்படையில் மதச்சடங்கு செய்யும் ஒருவர் பார்க்க அனுமதிக்கப்படுவார்.
கைதியின் உறவினர்களுக்கு எந்த காரணத்தைக் கொண்டும் தூக்கிலிடுவதைப் பார்க்க அனுமதிக்கப்படமாட்டார்கள். தேவைப்பட்டால் ஆய்வுக்காக அரசின் அனுமதி பெற்ற ஆராய்சியாளர்கள், மனநலநிபுனர்கள், மனோதத்துவ வல்லுநர்கள் உடன் இருக்கலாம்.
தூக்கிலிடப்டுவதற்கு முன்புவரை கைதிகள் குறித்து ஏதாவது தகவல் வருகிறதா என்பது குறித்து சிறையின் கண்காணிப்பாளர் கவனிக்க வேண்டும்.
தூக்கு தண்டனை எப்படி நிறைவேற்றப்படும்
கைதியின் உடலை உறவினரகள் கேட்டால், உடலை எந்தவிதமான ஊர்வலமாக எடுத்துச் செல்லமாட்டோம் என்ற உத்தரவாதத்துடன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். சிறையின் கண்காணிப்பாளர் செலவிலேயே ஆம்புலன்ஸ்மூலம் உடல் கொண்டுசெல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உடல் அடக்கம் செய்யப்படும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago