ரயில்வே துறைக்கு ஒரு வாரத்தில் ரூ.454 கோடி இழப்பு: கரோனா வைரஸால் பயணிகளின் டிக்கெட் ரத்தால் பாதிப்பு

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் அச்சம் காரணமாக பயணிகள் லட்சக்கணக்கானோர் தங்களின் பயணத்தைத் தவிர்த்து டிக்கெட்டை ரத்து செய்ததால், ரயில்வே துறைக்கு ஒரு வாரத்தில் ரூ.454 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலக நாடுகள் முழுவதையும் அச்சத்தின் பிடியில் கரோனா வைரஸ் வைத்துள்ளது. உலக அளவில் இதுவரை 8 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலும் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதுவரை கரோனா வைரஸால் இந்தியாவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துவிடக்கூடாது, நோய்த் தொற்று பரவக்கூடாது என்பதற்காக மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. மக்கள் தேவையின்றி பயணங்களை மேற்கொள்ள வேண்டாம், வீட்டிலேயே தங்கி இருக்கவும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மக்கள் கூட்டத்தைத் தவிர்க்கும் வகையில் பள்ளி கல்லூரிகளுக்கு வரும் 31-ம்தே திவரை விடுமுறை விடப்பட்டுள்ளது, திரையரங்குகள், அருங்காட்சிகள் உள்ளிட்ட மக்கள் கூடுமிடங்களையும் 31-ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் கடந்த சில நாட்களாக ரயில் பயணத்தைத் தவிர்க்கும் வகையில் மக்கள் தாங்கள் முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகள் அனைத்தையும் ரத்து செய்து வருகின்றனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாடு முழுவதும் 60 சதவீத ரயில்வே டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகள் கூட்டம் குறைவாக இருந்ததன் காரணமாக 184 ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பயணம் செய்த பயணிகளோடு ஒப்பிடும்போது, 69 லட்சம் பயணிகள் குறைவாகப் பயணித்துள்ளனர். பயணிகள் ரயில்களில் பயணம் செய்வது கடந்த ஒரு வாரத்தில் 45 சதவீதம் குறைந்துள்ளது

கரோனா வைரஸ் தொற்றுக்கு அச்சப்பட்டு மக்கள் பயணத்தைக் குறைத்ததால் நேற்று ஒரே நாளில் மட்டும் 99 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் கடந்த ஒரு வாரத்தில் ரயில்வே துறைக்கு ரூ.454 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்