பஞ்சாப் மாநிலத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் 167 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் வெளிநாட்டுக்கு சென்று வந்தவர்களின் பட்டியலை பெற்று அவர்களுக்கு கரோனா வைரஸ் இருக்கிறதா என சோதனை செய்ய மருத்துவ அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, பட்டியலில் உள்ளவர்களின் முகவரிகளைத் தேடிச் சென்றபோது அவர்களைக் காணவில்லை. அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், அவர்கள், தாங்கள் கொடுத்த முகவரியில் இல்லாதது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்களை தேடும் பணி நடக்கிறது.
லூதியானா மாவட்ட மருத்துவ அதிகாரி ராஜேஷ் பக்கா கூறுகையில், “வெளிநாட்டில் இருந்து லூதியானாவுக்கு திரும்பியவர்களின் பட்டியலில் காணாமல் போனவர்களில் 17 பேரை கண்டுபிடித்துள்ளோம். இன்னும் 167 பேரை காணவில்லை. தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தவறான முகவரி கொடுத்திருக்கலாம்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
51 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago