வெளிநாடுகளில் 276 இந்தியர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று

By செய்திப்பிரிவு

ஈரானில் உள்ள இந்தியர்கள் 255 பேர் மற்றும் பிற நாடுகளில் 21 பேர்களுக்கு கரோனா தொற்று பரவியுள்ளதையடுத்து கோவிட்-19 வைரஸுக்கு பாதிக்கப்பட்ட இந்தியர்கள் எண்ணிக்கை 413 ஆக அதிகரித்துள்ளது. மார்ச் 18 கணக்கின் படி இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 169 ஆக அதிகரித்துள்ளது.

உலக அளவில் கோவிட்-19 காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்தது.

காஷ்மீர் மற்றும் லடாக்கிலிருந்து ஈரான் சென்ற சுமார் 255 யாத்திரிகர்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியர்கள் தங்கியிருக்கும் விடுதிகளுக்கு ஈரான் தன் அதிகாரிகளை அனுப்பியது, அங்கு அவர்கள் தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ளாமல் இருந்தனர். விடுதிகளிலிருந்து இவர்களை அனுப்பவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதையடுத்து, காஷ்மீரிலிருந்து சென்ற குழுவின் தலைவர் நதீம் பட், தி இந்து, ஆங்கிலம் நாளிதழுக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கும் போது, “சாலையில் அமர்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. விடுதிகள் மூடப்படுவதால் எங்களுக்கு வேறு வழியில்லை” என்றார்.

இதுவரை ஈரானிலிருந்து அழைத்து வரப்பட்ட பயணிகள் 484 பேர்களும் ஜெய்சால்மரில் உள்ள ராணுவ சுகாதார மையத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

மாநிலங்களிலிருந்து வரும் தகவல்கள் அடிப்படையில் 19 புதிய கோவிட்-19 தொற்று இருப்பது தெரியவந்துள்ளது, 14 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது கரோனா தொற்று ஏற்பட்டவர்கள், சிகிச்சைப்பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 145.

கரோனா பாசிட்டிவ் நபர்களுடன் தொடர்பு வைத்திருந்த 5,700க்கும் மேற்பட்டோர் தொடர் கடும் கண்காணிப்பில் இருப்பார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க போக்குவரத்து வாகனங்களை கட்டுப்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் சாலைப்போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவுக்கு வரும் பயணிகள் அத்தியாவசியமில்லாத பயணங்களைத் தவிர்க்கவும் இந்தியாவுக்குள் வந்த பிறகு 14 நாட்கள் கட்டாயத் தனிமையில் இருக்கச் செய்யப்படுவார்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

இந்தியா

54 mins ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்