கரோனா வைரஸ்; இந்தூர்- மகாராஷ்டிரா பேருந்து சேவை தற்காலிக நிறுத்தம்

By பிடிஐ

இந்தூரிலிருந்து மகாராஷ்டிரா செல்லும் பேருந்து சேவையை தற்காலிகமாக நிறுத்துமாறு இந்தூர் கோட்ட ஆணையர் ஆகாஷ் திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சீனாவில் உருவான கொடிய கரோனா வைரஸ் நோய் தற்போது இந்தியாவிலும் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை 151 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் கரோனா வைரஸின் நோய்த் தொற்றுக்கு இதுவரை 42 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு வரும் மார்ச் 21-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி முடிய இந்தூரிலிருந்து மகாராஷ்டிரா செல்லும் பேருந்து சேவையை நிறுத்தியுள்ளது.

இந்தூரிலிருந்து மகாராஷ்டிரா செல்லும் பேருந்து சேவையை தற்காலிகமாக நிறுத்துவதற்கான உத்தரவை இன்று இந்தூர் கோட்ட ஆணையர் ஆகாஷ் திரிபாதி வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவில் இந்தூரிலிருந்து மகாராஷ்டிராவின் நகரங்களுக்கு குறிப்பாக மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களுக்குச் செல்லும் போக்குவரத்து மார்ச் 21-ம் தேதியிலிருந்து மார்ச் 31-ம் தேதி வரை நிறுத்தப்படும் என்று கூறியுள்ளது.

மத்தியப் பிரதேச அரசு ஏற்கெனவே பள்ளி மற்றும் சினிமா தியேட்டர்கள், அருங்காட்சியகங்கள் மற்ற இதர நிறுவனங்களையும் மூட உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்