எம்பிக்களை போல் எம்எல்ஏக்களுக்கும் வரிவிலக்கு: உபி சட்டப்பேரவையில் தீர்மானம்

By ஆர்.ஷபிமுன்னா

நாடாளுமன்ற எம்பிக்களை போல் தமக்கும் வரி விலக்கு வேண்டும் எனக் கோரி உத்தரபிரதேச மாநில எம்.எல்.ஏக்கள் நேற்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் எழுப்பிய இந்த பிரச்சனை தீர்மானமாக அனைத்து கட்சியினர் இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக நிறைவேறி உள்ளது.

இது குறித்து உபி மாநில சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடரின் நேற்றைய தின அவையில் பாஜக உறுப்பினர் மோகன்தாஸ் அகர்வால் பேசுகையில், ‘நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவையின் உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள். இவர்கள் இருவருமே மக்களின் நலனுக்காக செயல்படுபவர்கள்.

இந்த இருவரிடையே உள்ள ஒரே ஒரு வித்தியாசம் எம்பிக்களின் தொகுதி எங்களுடையதை விடப் பெரியது ஆகும். இதனால், எம்பிக்களுக்கு மட்டும் ஊதியங்களில் வரி விலக்கு மற்றும் பலவகையான சலூகைகள் கிடைத்து வருகின்றன. எனவே, இவை, உபி மாநில எம்.எல்.ஏக்களுக்கும் கிடைக்க வேண்டும்.’ எனத் தெரிவித்தார்.

இவரது கோரிக்கையை உடனடியாக சட்டப்பேரவையின் அனைத்துக் கட்சி உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து, உபி சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் முகம்மது ஆசம் கானால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த வரிவிலக்கு தீர்மானம் மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டு அது ஏற்றுக் கொண்ட பிறகே அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், உபி சட்டப்பேரவையில் பேசப்பட்டது போல் நாடாளுமன்ற எம்பிக்களுக்கு சம்பளத்தில் வரிவிலக்கு அளிக்கப்படுவதில்லை. ஒரு மாதத்திற்கு சுமார் 1,09,500 ரூபாய் பெறுபவர்களுக்கு அதில் ரூபாய் 50,000 ஊதியமாகவும் மீதி தொகுதி மற்றும் அலுவலகங்களின் செலவுத் தொகையாகவும் அளிக்கப்படுகிறது இத்துடன், எம்பிக்கள் பெறும் ஊதியத்துடன் சேர்த்து சிலவகை சலுகைகள் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

விமானம் மற்றும் ரயில்களில் இலவசப் பயணம், அரசு பங்களா உட்பட சில வகை சலூகைகளை எம்பிக்கள் மத்திய அரசிடம் இருந்து பெறுகின்றனர். இவர்களுக்கு நாடாளுமன்றம் நடைபெறும் நாட்களில் அக் கட்டிடத்தில் அமைந்துள்ள உணவு விடுதியிலும் மானிய விலையில் பிரியாணி மற்றும் அசைவ உணவு உட்பட பலவகைகளும் கிடைத்து விடுகிறது.

இந்த சலுகையினால் எம்பிக்களின் பெயர்களை கெடுக்க சதி நடைபெறுவதால் அதை ரத்து செய்ய வேண்டும் என சமீபத்தில் முடிந்த நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில் சர்ச்சை கிளம்பி இருந்தது. இந்த சமயத்தில், ஒரு மாநில எம்.எல்.ஏக்களுக்கு மத்திய அரசிடம் வரிவிலக்கு கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுவதில் உபி முதலாவதாகி விட்டதாகக் கருதப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்