காய்ச்சல், சளி இருந்தால் உணவு வழங்கும் பணி கூடாது: ஊழியர்களுக்கு ரயில்வே அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

ரயில்களில் காய்ச்சல், தொண்டை வலி, சளி தொந்தரவு இருக்கும் ஊழியர்களை உணவு வழங்குதல், கம்பளி வழங்குதல் போன்ற பணிகளை வழங்க வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

எனினும் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து வருகிறது.

ரயில்களில் காய்ச்சல், தொண்டை வலி, சளி தொந்தரவு இருக்கும் ஊழியர்களை உணவு வழங்குதல், கம்பளி வழங்குதல் போன்ற பணிகளை வழங்க வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ரயில்வே சார்பில் ஐஆர்டிசி உள்ளிட்ட துணை நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ரயில்களில் ஏராளமான பயணிகள் பயணம் செய்யும் நிலையில் அவர்களில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ரயில்களில் காய்ச்சல், தொண்டை வலி, சளி தொந்தரவு இருக்கும் ஊழியர்களை உணவு வழங்கும் பணியை செய்ய பணிக்க வேண்டாம். அதுபோலவே ஏசி உள்ளிட்ட பெட்டிகளில் கம்பளி மற்றும் பெட்ஷிட் வழங்கும் பணிகளையும் காய்ச்சல், சளி பாதிப்புள்ள ஊழியர்கள் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

23 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்