துணை ராணுவப்படை பாதுகாப்பு கொடுத்தால் போபால் திரும்புகிறோம்: ம.பி. போர்க்கொடி காங். எம்.எல்.ஏ.க்கள் 

By செய்திப்பிரிவு

பெங்களூருவில் அடைக்கலமாகியிருக்கும் மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் போர்க்கொடி எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேர் தங்களுக்கு துணை ராணுவப்படை பாதுகாப்பு அளித்தால் போபால் திரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

முதல்வர் கமல்நாத்தை கடுமையாக விமர்சித்த இவர்கள் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு எதிராக அன்று காங்கிரஸ் தொண்டர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தைச் சுட்டிக்காட்டி தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றனர்.

மேலும் தாங்கள் அனைவரும் பெங்களூருவுக்கு தாங்களாகவே வந்ததகவும் நாங்கள் யார் பிடியிலும் பிணையாக இல்லை என்றும் தங்களுக்கு யாரும் நெருக்கடி அளிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

இதோடு தாங்கள் இன்னும் பாஜகவில் சேர முடிவெடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர்

கமல்நாத் அரசுக்கு எதிராக ஜோதிராதித்ய சிந்தியாவுடன் 22 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தியதால் மத்தியப் பிரதேச காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது,

இந்நிலையில் போர்க்கொடி தூக்கிய எம்.எல்.ஏ.க்களான கோவிந்த் சிங் ராஜ்புத், ராஜ்வர்தன் சிங், அந்தால் சிங் கன்சனா, துல்சி ராம் சிலியாவட், இமார்தி தேவி மற்றும் பிஷாஹு லால் சிங் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

இவர்கள், “சிந்தியாவுக்கே தாக்கப்படும் நிலை என்றால் எங்களுக்கு என்ன நடக்கும்? ஆகவே போபால் வரத் தயாராக இருக்கிறோம் ஆனால் மத்திய படையின் பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்றன.ர்

எம்.எல்.ஏ. ராஜ்புத், முதல்வர் கமல்நாத்தைச் சாடிப் பேசிய போது, “மற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தொகுதி வளர்ச்சிக்காக ஒரு ரூபாய் கூட கமல்நாத் அளிப்பதில்லை, மாறாக அவர் தனது சிந்த்வாரா தொகுதிக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொட்டி அழுகிறார்” என்று சாடினார்.

மேலும் பாஜகவில் இணைவது பற்றி அனைவரும் சேர்ந்து முடிவெடுப்போம், என்று இவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

55 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்