வர்த்தக நிறுவனங்களை மூடுவதால் வைரஸில் இருந்து தப்பிக்கலாம்: பசியினால் உயிரிழப்பு ஏற்படும் சாம்னா தலையங்கத்தில் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வநாளிதழான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் கோவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இது மேலும் பரவுவதைத் தடுக்க திரையரங்குகள், வர்த்தக வளாகங்கள் உள்ளிட்டவற்றை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. மற்ற கடைகளும் விரைவில் மூடப்படலாம்.

இதே நிலை நீண்ட நாட்கள் தொடர்ந்தால் மக்கள் எப்படி பணம் சம்பாதிப்பார்கள்? எதை அவர்கள் சாப்பிடுவார்கள்? இதுபோன்ற நடவடிக்கையால் வைரஸிடம் இருந்து மக்களை பாதுகாக்க முடியும். ஆனால், பசி காரணமாக உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

புனே நகரில் அதிகப்படி யானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் வூஹான் நகரைப் போல புனேவும் முற்றிலும் முடங்குமா? இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டியது மிகவும் முக்கியம். ஆனால் இந்த வைரஸ் பாதிப்பு இப்போது 2-ம் நிலையில் உள்ளது. இந்த நிலையிலேயே மேலும் பரவுவதை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். அதுவும் அடுத்த 30 நாட்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். இதற்காக அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு சாம்னா தலை யங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்