காபி டே எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் கணக்கு களில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடி மாயமாகியுள்ளது. நிறுவனத்தின் இயக்குநர் குழு மேற்கொண்ட விசாரணையில் இத்தகவல் அம்பலமாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் காபி டே நிறுவனர் வி.ஜி.சித் தார்த்தா தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் காரில் பயணம் செய்த 59 வயதான சித்தார்த்தா, தனது டிரைவரிடம் ஆற்று பாலத்தின் மீது காலாற நடந்துவிட்டு வருவதாகக் கூறிச் சென்றார். ஆனால் அவர் திரும்ப வில்லை. இரண்டு நாட்கள் கழித்து அவரது உடலை உள்ளூர் மீனவர் கள் ஆற்றிலிருந்து மீட்டனர். நிதி நெருக்கடி காரணமாக அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப் பட்டது. அதேநேரம் முதலீட்டாளர் களின் நெருக்குதலும் அவரது சோக முடிவுக்குக் காரணம் என கூறப்பட்டது.
இந்நிலையில் காபி டே நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் குறித்து இயக்குநர் குழு ஆய்வு செய்து விசாரணை நடத்தியது. ஏறக்குறைய ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தத் தணிக்கை இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. இது தொடர்பான அறிக்கை விரைவில் சமர்ப்பிக் கப்பட உள்ளதாக அந்நிறுவனத் தின் செய்தித் தொடர்பாளர் தெரி வித்துள்ளார்.
இதனிடையே, சுமார் 100 பக்கங்களுக்கு மேல் கொண்ட வரைவு அறிக்கையில் இடம் பெற்றுள்ள சில தகவல்கள் கசிந் துள்ளன. அதன் விவரம் வருமாறு:
காபி டே நிறுவனத்தின் சுமார் ரூ.2,000 கோடி அளவிலான நிதி பரிவர்த்தனை குறித்த கணக்கு விவரங்களே இல்லை. அந்தத் தொகை முழுவதும் மாயமாகி உள்ளது. அது தொடர்பான எவ்வித விவரமும் இல்லை என வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இறுதிகட்ட நிலையில் அறிக்கை இருந்தாலும், ஒட்டுமொத்தமாக கணக்கில் வராத தொகையின் அளவு ரூ.2,500 கோடி அளவுக்கு இருக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை என்று தகவலறிந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
நிறுவனத்திலிருந்து இவ்வளவு பெரிய தொகை மாயமானது எப்படி. நிறுவனத்தில் இருப்புத் தொகை, லாபம் உள்ளிட்டவை செயற்கையாக அதிகரித்து காட்டப் பட்டதா என்றும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது. சித்தார்த்தாவுக்கு இருந்த ஒட்டுமொத்த கடன் தொகை ரூ.10,000 கோடி இருக்கும் என விசாரணைக் குழு கண்டறிந்துள் ளது. கடனுக்கு வட்டி செலுத்து வதற்காக தொடர்ந்து கடன் பெற்றதாக இதுபற்றி முழு விவரம் அறிந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்பது தொடர்பாக பிளாக் ஸ்டோன் குழுமத்துடனான பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இதன்மூலம் திரட்டப்படும் நிதி நிறுவனத்தின் கடன் சுமையைப் பெருமளவு குறைக்கும். நிறுவ னத்தை நம்பியுள்ள ஊழியர் களைக் காப்பது மற்றும் பிரபல மான பிராண்டை காப்பதும்தான் பிரதான நோக்கமாக உள்ளது என்று நிறுவன செய்தித் தொடர் பாளர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago