வைரஸ் பாதித்தவர்கள் தப்பிச் செல்ல கூடாது; பொறுப்புள்ள குடிமக்களாக செயல்பட பிரதமர் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

‘‘கோவிட்-19 வைரஸை எதிர்த்துப் போராட, பொறுப்புள்ள இந்திய குடிமக்களால் கூடுதல் பலம் வழங்க முடியும்’’ என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் ‘கோவிட்-19’ வைரஸால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. அவர் டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு ரயிலில் தப்பிச் சென்றுள்ளார். இதுபோல் மற்ற சிலரும் ‘கோவிட்-19’ பாதிப்பு அல்லது அறிகுறிகள் இருந்தும், மருத்துவ மையங்களில் ஒத்துழைப்பு கொடுக்காமல் தப்பிச் சென்ற செய்திகள் வெளியாயின.

இத்தகவலை ட்விட்டரில் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். அதற்கு, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

‘கோவிட்-19’ வைரஸ் பரவி வரும் இந்தச் சூழ்நிலையில், இந்திய மக்கள், பொறுப்புள்ள குடிமக்களாகச் செயல்பட வேண்டும். இந்த நாட்டின் மக்கள், மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொள்ள மாட்டார்கள் என்று நம்புகிறேன். மேலும், வைரஸை எதிர்த்து போராடும் நடவடிக்கைகளுக்கு, பொறுப்புள்ள குடிமக்கள் கூடுதலாக பலம் சேர்ப்பார்கள். இவ்வாறு ட்விட்டரில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பிரதமர் பாராட்டு

‘கோவிட்-19’ வைரஸ் பாதிப்புசவாலை சுகாதாரத் துறை மருத்துவர்கள், செவிலியர்கள், நகராட்சிஊழியர்கள், விமான நிலைய ஊழியர்கள் சிறப்பாக கையாண்டு வருவதாக, ட்விட்டரில் பலர் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

அந்த ‘ட்விட்’களை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் ‘ட்விட்’ செய்துள்ளார். மேலும், சுகாதாரத் துறையைச் சேர்ந்த அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட மற்றொரு பதிவில் கூறியிருப்பதாவது:

வைரஸைக் கட்டுப்படுத்த அத்தியாவசியம் இல்லாமல் வெளியிடங்களுக்குப் பயணம் செய்வதையும் வெளியில் செல்வதையும் மக்கள்தவிர்க்க வேண்டும். தற்போதைக்கு இந்த செயல்கள்தான் வரவேற்கத்தக்கது, புத்திசாலித்தனமானது. வைரஸ் பாதிப்பு சவாலை இந்திய சுகாதாரத் துறையினர் மிகச் சிறப்பாக கையாண்டு வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வைரஸை இந்தியா எப்படி எல்லாம் கையாண்டு வருகிறது என்று பலரும் பல்வேறு கோணங்களில் பாராட்டி உள்ளனர். இது மருத்துவர்கள், செவிலியர்கள், நகராட்சி ஊழியர்கள், விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் மற்ற அனைத்துத் துறை ஊழியர்களுக்கும் நிச்சயம் ஊக்கம் அளிப்பதாக இருக்கும். அவர்களுடைய பங்களிப்பை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி ட்விட்டரில் கூறியுள்ளார்.

‘‘வைரஸை கட்டுப்படுத்த அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளன’’ என்று ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, ‘‘சிங்கப்பூரில் இருந்து நான் மார்ச் 7-ம் தேதி இந்தியா திரும்பினேன். தகவல் அறிந்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள், என்னைச் சந்தித்து என் உடல்நலத்தை பரிசோதித்தனர். விமான நிலையத்தை விட்டு நாங்கள் வெளியில் வரும்போது, அங்கு ஒரு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு வந்தோம். அதை வைத்துக் கொண்டு அதிகாரிகள் வந்து என் உடல்நலத்தைப் பரிசோதித்தனர். அந்தளவுக்கு துடிப்புடன் செயலாற்றி வரும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்