உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக சார்பில் முதல்வராக இருந்து 3 ஆண்டுகளை நிறைவு செய்யும் முதல் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
வரும் 19-ம் தேதியுடன் முதல்வர் ஆதித்யநாத் 3 ஆண்டுக்கால ஆட்சியை நிறைவு செய்கிறார்.
இதற்கு முன் இருந்த கல்யாண் சிங், ராம் பிரகாஷ் குப்தா, ராஜ்நாத் சிங் ஆகியோர் முழுமையாக 3 ஆண்டுகளை முதல்வராக இருந்து நிறைவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த 2017-ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 403 இடங்களில் 312 இடங்கள் பெற்று பாஜக ஆட்சியைப் பிடித்தது. கோரக்பூர் தொகுதி எம்.பி.யாக நான்கு முறை(1998, 1999, 2994, 2009, 2014) வைர இருந்த யோகி ஆதித்யநாத் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.
» கரோனா வைரஸ் தீவிரம்: இந்தியாவில் பாதிப்பு 107 ஆக அதிகரிப்பு: மகாராஷ்டிராவில் புதிதாக 12 பேர்
ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக கைவசம் இருந்த கோரக்பூர், பூல்பூர், கைரானா ஆகிய தொகுதிகளில் பாஜக படுதோல்வி அடைந்தது. இதையடுத்து தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் என்று முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் உ.பியில் உள்ள 80 தொகுதிகளில் 62 தொகுதிகளை பாஜக அபாரமாகக் கைப்பற்றியது. அப்னா தளம் 2 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 10 இடங்களிலும், சமாஜ்வாதி 5 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வென்றது.
உத்தரப்பிரதேச மாநிலத்தைக் கடந்த 3 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் முதல்வர் ஆதித்யநாத் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மாநிலத்தில் செய்துள்ளார். குண்டர்களை ஒழித்தல், ரவுடிகளை அடக்குதல், தொழில்ரீதியாக மாநிலத்தை முன்னேற்ற நடவடிக்கை எனப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்
உ.பி. பாஜக ஊடக ஒருங்கிணைப்பாளர் ராகேஷ் திரிபாதி கூறுகையில், " யோகி ஆதித்யநாத் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். பரம்பரை அரசியலில் ஈடுபட்ட குடும்பத்தைச்ச சேர்ந்தவர் இல்லை. முதல்வராக, எம்பியாக வருவதற்கு ஆதித்யநாத் கடினமான சோதனைகளைக் கடந்து வந்தார்.
கோரக்பூர் ஆதித்யநாத்தின் வேகமான பணிகள், சுறுசுறுப்பு ஆகியவருக்கும் உற்சாகம் தரும். மாநிலத்தில் குற்றத்தைக் குறைத்தல், ஊழலை அகற்றுதல், சிறந்த நிர்வாகம் ஆகியவற்றைத் தர ஆதித்யநாத் தீவிரமாக உழைக்கிறார். பிரயாக்ராஜ் நகரில் வெற்றிகரமாகக் கும்பமேளா நிகழ்ச்சியை நடத்தியவர் ஆதித்யநாத்.
பர்வாசி பாரதிய திவாஸ், முதலீட்டாளர்கள் மாநாடு, பாதுகாப்புத்துறை கண்காட்சி ஆகியவற்றை ஆதித்யநாத் நடத்திக் காட்டியுள்ளார். ஒட்டுமொத்தத்தில் பாஜக சார்பில் 3 ஆண்டுகளை உ.பியில் நிறைவு செய்த முதல் முதலமைச்சர் ஆதித்யநாத் மட்டுமே." எனத் தெரிவித்தார்
ஆனால், காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் அசோக் சிங் கூறுகையில், " ஆதித்யநாத்தின் 3 ஆண்டுகள் ஆட்சியில் பொய்கள் நிரம்பியிருந்தன. விவசாயிகள், இளைஞர்கள் ஏமாற்றப்பட்டார்கள். உத்தரப்பிரதேசத்தில் காட்டாட்சிதான் நடக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றத்தைக் குறைக்கவே முடியவில்லை" எனக் குற்றம்சாட்டினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago