ஸ்ரீநகர் சிறையில் மகன் ஒமரை சந்தித்தார் பருக் அப்துல்லா

By செய்திப்பிரிவு

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, ஸ்ரீநகர் கிளைச் சிறையில் உள்ள தனது மகன் ஒமர் அப்துல்லாவை நேற்று சந்தித்து பேசினார்.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டனர்.

இவர்களில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, ஸ்ரீநகரில் உள்ள அவரது வீட்டிலேயே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். பிறகு செப்டம்பர் 15-ம் தேதி அவர் சர்ச்சைக்குரிய பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டார்.

காஷ்மீரில் நிலைமைக்கு ஏற்ப தடுப்பு காவலில் வைக்கப் பட்டுள்ள அரசியல் தலைவர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டு நேற்று முன்தினம் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் 7 மாதங்களுக் கும் மேலாக தடுப்புக் காவலில் இருக்கும் முன்னாள் முதல்வரும் தனது மகனுமான ஒமர் அப்துல்லாவை சந்திக்க அவர் அனுமதி கோரினார். அதிகாரிகள் இதற்கு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, ஸ்ரீநகர் ஹரிநிவாஸ் கிளைச் சிறையில் உள்ள தனது மகனை அவர் சந்தித்தார். உணர்ச்சிகரமான இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நீடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

46 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்