கோவிட்-19 தொற்று பரிசோதனைக்காக நாக்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நால்வர் தப்பினர்

By செய்திப்பிரிவு

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில்கோவிட்-19 வைரஸ் தொற்றுசந்தேகத்தின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேர் அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் வீடு திரும்பினர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “கோவிட்-19 வைரஸ் தொற்று சந்தேகத்தின் பேரில் நாக்பூரில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர்வந்தனர். அவர்களின் ரத்த மாதிரிபரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் முடிவு வரவில்லை. தனிமை சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்ட இந்தநால்வரும் அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் வெள்ளிக்கிழமை இரவு வீடு திரும்பினர். பின்னர் இவர்கள் கண்டறியப்பட்டு, மருத்துவமனை திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கோவிட்-19 பாதிப்பு உள்ளவர்கள் பயன்படுத்தும் கழிப்பறையையே தங்களையும் பயன்படுத்துமாறு கூறியதால் மருத்துவனையை விட்டுச் சென்றதாக அவர்கள் கூறினர். அவர்களின் ரத்தப் பரிசோதனை முடிவுக்காக மருத்துவர்கள் காத்துள்ளனர்” என்றார்.

இந்நிலையில் போலீஸாரின் கோரிக்கையை ஏற்று 3 பேர் மருத்துவமனைக்கு திரும்பிவிட்டனர். மேலும் ஒருவர் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாக்பூரில் 3 பேர் உட்பட மகாராஷ்டிராவில் இதுவரை 19 பேருக்கு கோவிட்-19தொற்று இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்