கரோனா தொற்றுடன் வந்த ஊழியர்; கட்டிடத்தை காலி செய்த இன்போசிஸ்

By செய்திப்பிரிவு

பெங்களூருவில் உள்ள இன்போசிஸ் நிறுவனம் கரோனா தொற்றுடன் ஊழியர் ஒருவர் பணிக்கு வந்ததாக சந்தேகம் எழுந்ததால் கட்டிடத்தை காலி செய்துள்ளது.

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் இந்தியாவுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. இதுவரை இந்தியாவில் 81 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 17 பேர் வெளிநாட்டவர்கள். கரோனா வைரஸால் 2 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பல்வேறு மாநில அரசுகளும் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவும் தீவிரத்தைத் தடுக்கும் வகையில் அடுத்த ஒரு வாரத்துக்கு பள்ளி, கல்லூரிகள் அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒருவாரத்துக்கு மூடப்படுகின்றன

மாநிலத்தில் செயல்படும் அனைத்து திரையரங்குகள், நைட் கிளப்புகள், பப்புகள், ஷாப்பிங் மால்கள் அடுத்த ஒருவாரத்துக்கு மூடப்படும். கண்காட்சிகள், கோடைகால பயிற்சி வகுப்புகள், திருமணங்கள், விளையாட்டுப் போட்டிகள், மாநாடுகள் அனைத்தும் அடுத்த ஒரு வாரத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில், பெங்களூருவில் உள்ள இன்போசிஸ் நிறுவனம் கரோனா தொற்றுடன் ஊழியர் ஒருவர் பணிக்கு வந்ததாக சந்தேகம் எழுந்ததால் கட்டிடத்தை காலி செய்துள்ளது.

இதுகுறித்து இன்போசிஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இமெயில் மூலம் சுற்றிக்கை அனுப்பியுள்ளது. அதில் ‘‘ஐஐபிஎம் கட்டிடத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. எனவே அந்த கட்டிடத்தை காலி செய்கிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதனை செய்கிகிறோம்’’ எனக் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்