மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை (டிஏ) 4 சதவீதம் உயர்த்தி வழங்கப் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 21 சதவீதமாக அதிகரித்துள்ளது
மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் நிருபர்களுக்கு விளக்கம் அளித்தனர். அப்போது ஜவடேகர் கூறியதாவது:
மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்திலிருந்து அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முன் 17 சதவீதம் இருந்த அகவிலைப்படி 21 சதவீதமாக உயர்கிறது. இதன் மூலம் 48 லட்சம் ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் பெறுவார்கள். இதனால் நடப்பு நிதியாண்டில் அரசுக்குக் கூடுதலாக ரூ.14 ஆயிரத்து 595 கோடி செலவாகும். இது ஜனவரி 1-ம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும்.
கடந்த 2016-ம் ஆண்டில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு 7-வது ஊதியக் குழுவை நடைமுறைப்படுத்தியது. அதன்பின் அரசு ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது, தற்போது அகவிலைப்படியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு ஊழியர்களுக்கு உதவும். இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்
» அனைத்துத் தலைவர்களும் விடுவிக்கப்பட்ட பின் எதிர்காலம் குறித்து முடிவு: பரூக் அப்துல்லா பேச்சு
மத்திய நிதியைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், " யெஸ் வங்கியைச் சீரமைக்கும் ரிசர்வ் வங்கியின் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நிதிச்சிக்கலில் இருக்கும் யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை எஸ்பிஐ வங்கி எடுத்துக்கொண்டுள்ளது. மற்ற முதலீட்டாளர்களையும் எஸ்பிஐ வங்கி வரவேற்றுள்ளது.
அனைத்து முதலீட்டாளர்களும் 3 ஆண்டுகள் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வங்கியின் கடன் வழங்கும் திறன் ரூ.1200 கோடியிலிருந்து ரூ.6,200 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களின் நலன் கருதி, யெஸ் வங்கியின் நிலைத்தன்மையை உறுதி செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக எஸ்பிஐ வங்கி ரூ.7,250 கோடியை முதலீடு செய்ய உள்ளது " எனத் தெரிவித்தார்
முக்கிய செய்திகள்
இந்தியா
19 mins ago
இந்தியா
23 mins ago
இந்தியா
34 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago