தடுப்புக்காவலில் இருந்த பரூக் அப்துல்லா விடுவிப்பு: காஷ்மீர் அரசு உத்தரவு

By செய்திப்பிரிவு

பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த காஷ்மீர் முன்னாள் முதல்வரும், எம்.பி.யுமான பரூக் அப்துல்லா இன்று விடுவிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் பிறப்பித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அரசியலமைப்பு 370-வது பிரிவு ஆகியவற்றைக் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி திரும்பப்பெற்றது மத்திய அரசு.

இதையடுத்து, முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, எம்.பி. பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். அதன்பின் இவர்கள் 3 பேரும், பொதுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அறிவித்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்த மத்திய அரசு லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இது கடந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

நாடாளுமன்றக் குளிர்காலக்கூட்டத் தொடரில் தன்னை பங்கேற்க விடமாமல் மத்திய அரசு வீட்டுக்காவலில் வைத்துள்ளதாக பரூக் அப்துல்லா குற்றம்சாட்டினார். மேலும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் எழுதிய கடிதத்துக்கும் பரூக் அப்துல்லா பதில் கடிதம் எழுதி இருந்தார். அதை சசி தரூர் வெளியிட்டார்.

இந்தநிலையில் ஜம்மு காஷ்மீர் யூனியன்பிரதேச நிர்வாகம் பரூக் அப்துல்லாவின் தடுப்புக் காவலை நீக்கியும், அவரை விடுவித்தும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச முதன்மைச் செயலாளர் ரோஷித் பிறப்பித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்