பெண்களுக்கென தனி பஸ்கள்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில், பெண்களுக்கென தனியாக பிங்க் பஸ்கள் இயக்கப்படும். இந்த பஸ்களில் ஓட்டுநர், நடத்துநர், பயணிகள் என அனைவரும் பெண்களாகவே இருப்பர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

இதன்படி, சில நகரங்களில் ஏற்கெனவே இந்த வகை பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவை வெற்றிகரமாக செயல்படுகின்றன.

டெல்லியில் அனைத்து புதிய பஸ்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் 2 மற்றும் 3 சக்கர மின்சார வாகனங்களுக்கு உரிமம் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வகை வாகனங்கள் பெண்களின் போக்குவரத்துக்காக பெண்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்