நூறு நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வரும் 4 ஆண்டுகளுக்குள் 2 லட்சம் அங்கன்வாடி மையங்களை மத்திய அரசு கட்ட உள்ளது.
ஆண்டுக்கு 50 ஆயிரம் வீதம் பிஹார், சத்தீஸ்கர், ஜார்க் கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் மிகவும் பின்தங்கிய கோட்டங்களில் இவை அமைக்கப்பட உள்ளன. இந்த மாநிலங்களுடன் மகாராஷ்டிரா, அசாம், ராஜஸ்தான், தெலங் கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களும் இணைக்கப்பட் டுள்ளன. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி யில் ஒருங்கிணைந்த மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்டங் களை ஒருமுகப்படுத்தும் திட்டத்துக்காக ஓர் அறிவிக்கை வெளி யிடப்பட்டது. மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் கீழ் வரும் இந்த திட்டத்தை நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமல்படுத்தும் என அந்த அறிவிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதை செயல்படுத் துவதற்காக மத்திய அரசின் இரு துறைகளும் இணைந்து சமீபத்தில் சில சட்ட விதிமுறைகளை வெளியிட்டுள்ளன.
இது குறித்து ‘தி இந்து’விடம் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறும்போது, “இந்த 10 மாநிலங்களில் மிகவும் பின்தங்கியுள்ள மாவட்டங்களின் 2,534 கோட்டங்களில் 50,000 அங்கன்வாடிகள் கட்டுவதற்கான இடங்களை மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தேர்ந்தெடுக்கும். பின்தங்கிய பகுதிகளில் பெரும்பாலானவை அசாம், ஒடிசா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்தாலும் அவற்றுடன் பாஜக அரசியல் ரீதியாக முன்னேற்றம் காட்டும் மாநிலங்களும் சேர்க்கப் பட்டுள்ளன. இத்திட்டத்துக்கு உலக வங்கி நிதியுதவி அளிக்கிறது” என்றனர்.
நாடு முழுவதும் மழலையர் பள்ளிகளாக செயல்படும் அங்கன் வாடிகளில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தும் வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களில் அமைந்துள்ள இவற்றில் 6 வயதுக்கும் குறைந்த குழந்தைகள் மட்டும் சேர்க்கப் படுகின்றனர். நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் பணியாற்று வோரின் குழந்தைகள் காப்பகமாகவும் இவை விளங்குகின்றன. தற்போது மத்திய அரசின் இரு துறைகள் வகுத்துள்ள திட்டத்தில் இவற்றுக்கு நிரந்தரக் கட்டிடங்கள் கட்டித்தரப்பட உள்ளன.
ஏற்கெனவே உள்ள சட்டப்படி கிராமப்புறங்களில் குறைந்தபட்சம் 800 பொதுமக்களுக்கு ஒன்று என்ற வகையில் அங்கன்வாடிகள் கட்டப்படுகின்றன. இதுவே மலைவாழ் மற்றும் பழங்குடியினர் பகுதியெனில் 300 மக்களுக்கு ஒன்று என கட்டப்படுகிறது. 150 பேர் வாழும் பகுதிகளில் சிறிய அங்கன்வாடிகளும் கட்டப்படுகின்றன. தற்போது நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் அங்கன்வாடிகள் உள்ளன. இவற்றில் பாதி எண்ணிக்கைக்கு மட்டுமே நிரந்தர கட்டிடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
22 hours ago