திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தும் கும்பலை நேற்று கடப்பா காவல் துறையினர் கைது செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட லாரி ஓட்டுநருக்கு ரூ.200 கோடி அளவுக்கு சொத்து இருப்பது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு, கடப்பா மாவட்டம், சேனூரு பகுதியில் கடப்பா காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காரில் வந்த ஒரு கும்பலிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அனைவரும் செம்மர கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், தெலங்கானா மாநிலம் மஹபூப் நகர் மாவட்டம், அண்ணா சாகரம் எனும் இடத்தில் ஒரு கிடங்கில் செம்மரங்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. நேற்று அங்கு சென்ற காவல் துறையினர், 2.2 டன் எடையுள்ள 171 செம்மரங்களை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.2.67 கோடி என கூறப்படுகிறது.
மேலும், கடத்தல் கும்பலை சேர்ந்த வெங்கட் ரெட்டி, முகமது அலி, வீரபத்ரய்யா, ராஜமோகன் ரெட்டி, செங்கல் ராவ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.4.30 லட்சம் ரொக்கம், செம்மரங்களால் செய்யப்பட்ட மணிகள், 7 செல்போன்கள், 3 கார்கள், ஒரு ஆயில் டேங்கர் லாரி போன்றவற்றையும் பறிமுதல் செய்தனர்.
ரூ. 200 கோடி சொத்து
கைது செய்யப்பட்ட செங்கல் ராவ் சுமார் 20 ஆண்டுகளாக லாரி ஓட்டுநராக செம்மரங்களை கடத்தும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். திருப்பதியைச் சேர்ந்த இவருக்கு சென்னையை சேர்ந்த சில செம்மர கடத்தல்காரர்களிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் லாரியில் செம்மரங்களை கடத்துவதையே முழு நேர தொழிலாக மாற்றி கொண்டார். 3-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள செங்கல் ராவ், அழுக்கு சட்டை அணிந்து, பேருந்து நிலையங்களில் படுத்துக் கொண்டும், ரயில்களில் பயணம் செய்தும் செம்மர கடத்தல் தொழில் செய்து வந்துள்ளார்.
கடத்தல் தொழில் மூலம் கிடைத்த பணத்தில் இவர் ஹைதராபாத், திருப்பதி, கடப்பா போன்ற இடங்களில் பல அடுக்கு மாடி கட்டிடங்களை வாங்கி உள்ளார். நகை, பணம் என எக்கச்சக்கமாக சொத்து சேர்த்துள்ளார்.
இவரின் இன்றைய சொத்து மதிப்பு ரூ.200 கோடி என விசாரணையில் தெரியவந்ததும், காவல் துறையினரே அதிர்ச்சிக் குள்ளாகி உள்ளனர். சட்ட விரோதமாக சேர்க்கப்பட்ட இவரின் சொத்துகளையும் முடக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
20 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago